Asianet News TamilAsianet News Tamil

குட் நியூஸ்... தமிழகத்தில் கொரோனா பரவல் முதல்கட்டத்திலேயே இருக்கிறது ..முதல்வர் எடப்பாடி நிம்மதி பெரு மூச்சு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கலுக்கு பலியானோர் எண்ணிக்கை 25,000 ஆக உயர்ந்திருக்கிறது. உலகம் முழுவதும் 5,31,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் கொரோனா தாக்குதலுக்கு 17 பேர் பலியாகி இருக்கிறார்கள். 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Good news ... Coronal spread in Tamil Nadu is only in the first stage ..
Author
Tamil Nadu, First Published Mar 27, 2020, 8:55 PM IST

 T.Balamurukan 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கலுக்கு பலியானோர் எண்ணிக்கை 25,000 ஆக உயர்ந்திருக்கிறது. உலகம் முழுவதும் 5,31,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் கொரோனா தாக்குதலுக்கு 17 பேர் பலியாகி இருக்கிறார்கள். 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.இதில் மதுரை, சேர்ந்த ஒருவர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர்.  கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Good news ... Coronal spread in Tamil Nadu is only in the first stage ..

சென்னை ஓமந்தூரர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்து முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார். இந்நிலையில், முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்தார்."தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்க முழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். முதியோர்கள், கர்ப்பிணிகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். 

Good news ... Coronal spread in Tamil Nadu is only in the first stage ..

தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஒரே வழி அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்வதே. கொரோனா ஒரு கொடிய தொற்று என்பதால் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கட்டுப்பாடு அறையை உடனே தொடர்பு கொள்ள வேண்டும். மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். சென்னை, மற்றும் கோவை,மதுரை கொரோனாவிற்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு மக்களையும், நாட்டையும் பாதுகாப்பதற்கே ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios