Asianet News TamilAsianet News Tamil

மாட மாளிகையில் வாழ வைக்கவா போறாங்க..? உனக்குத்தானடி சிக்கல்... சீறும் சீமான்..!

ட்ரம்ப் வருகையின்போது குடிசைகள் தெரிந்துவிடக்கூடாது என்று ஏழு அடி சுவர் எழுப்பி அதனை மறைக்க முயற்சி எடுத்து வருகின்றனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். 

Going to live in the attic ... trouble for you
Author
Tamil Nadu, First Published Feb 21, 2020, 12:41 PM IST

ட்ரம்ப் வருகையின்போது குடிசைகள் தெரிந்துவிடக்கூடாது என்று ஏழு அடி சுவர் எழுப்பி அதனை மறைக்க முயற்சி எடுத்து வருகின்றனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’குடியுரிமை சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் ஒட்டியவர்தான் முதலில் பாதிப்படைவார். சிஏஏ சட்டத்தினால் ஆபத்து என்னவென்று தெரிந்தனால்தான் விழித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Going to live in the attic ... trouble for you

வாக்களித்து வெற்றி பெற வைத்த நாட்டு மக்களுக்கு பணியாற்றுவது மட்டும்தான் ஆட்சியாளர்களின் கடைமையே தவிர, அதை விடுத்து நாட்டின் குடிமகனா என்று கேள்வி கேட்பது கிடையாது. அமைச்சர் ஜெயக்குமார் குடியுரிமை இல்லை என்றால் முகாம்களில் அடைக்கப்படுவார்கள் என்று ஏளனமாக பேசுகிறார்.

இதையும் படியுங்கள்:- சீமான் என்னை மதுரையில் 7 நாட்களாக ஒரு அறைக்குள் வைத்து... விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!

இன்றைக்கு ட்ரம்ப் வருகையின்போது குடிசைகள் தெரிந்துவிடக்கூடாது என்று ஏழு அடி சுவர் எழுப்பி அதனை மறைக்க முயற்சி எடுத்து வருகின்றனர். அந்த செங்கலை கொண்டு குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்திருந்தால் அது ஆக்கபூர்வமான செயலாக இருந்திருக்கும். குடியுரிமை சட்டத்தை ஆதரிப்பவர்கள் மாட மாளிகையில் வாழ வைக்கப் போகிறீர்களா? தற்போதும் குடிசையில் தான் வாழ்ந்து வருகிறார்கள். குடிசையில் வாழ்ந்து வருபவர்கள் எந்தவித ஆவணங்கள் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?Going to live in the attic ... trouble for you

சட்டப்பேரவையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பை சட்ட மசோதாவாக இயற்றி இருக்கிறார்கள்.  இது வரவேற்கத்தக்க முயற்சி. தமிழக அரசு அதனை முன்மொழிந்து உள்ளது. மத்திய அரசு அதை ஏற்கிறதா? அல்லது நிராகரிக்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios