Asianet News TamilAsianet News Tamil

டெல்லி சென்று கனிமொழியை வெறுப்பேற்றி... நீளும் உதயநிதி லாபி...!

உதயநிதி டிக் அடித்து வாய்ப்பு கேட்ட வேட்பாளர்கள் அனைவருமே தேர்தலில் வென்று விட்டார்கள் என்பதால், இனி உதயநிதியின் கை கட்சிக்குள் பலமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

Go to Delhi and hate the kanimozhi... Neelum Udayanidhi
Author
Tamil Nadu, First Published Jan 14, 2020, 5:46 PM IST

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், டெல்லியில் தாக்குதலுக்கு உள்ளான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார்.

டெல்லி அரசியலில் தயாநிதி மாறனும், கனிமொழியும் திமுக குடும்பத்தில் இருந்து ஏற்கெனவே சென்றுள்ள நிலையில், திமுகவின் வாரிசு அரசியலாக உதயநிதி, தமிழகத்தில் அடுத்தடுத்து பதவிக்கு வந்திருப்பதையே திமுக தொண்டர்கள் பெருமளவில் ரசிக்காத நிலையில், டெல்லி வரைச் சென்று மாணவர்களை சந்தித்திருப்பது, திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Go to Delhi and hate the kanimozhi... Neelum Udayanidhi

தமிழக இடைத்தேர்தலில், உதயநிதி முழு பொறுப்பையும் ஏற்று வியூகம் வகுத்தும் தோல்வியைத் தழுவியதால், அந்த காரணத்தைக் காட்டியே திமுகவில் உதயநிதியின் வளர்ச்சியை கொஞ்ச காலத்திற்கு தள்ளிப் போடலாமா என்று ஸ்டாலினிடம் பேசி வருகிறார்கள். ஆனால், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச உதயநிதியால் தான் முடியும் என்று ஸ்டாலின் திட்டவட்டமாக நம்புகிறாராம். அதனால், வரும் சட்டசபைத் தேர்தலில் உதயநிதியின் வியூகம் பெருமளவில் இருக்கும் என்கிறார்கள்.

Go to Delhi and hate the kanimozhi... Neelum Udayanidhi

இந்ஜே.என்.யூ பல்கலைக்கழகம் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து பேசிய உதயநிதிக்கு தேசிய அளவில், திமுக சார்பாக அங்கீகாரம் கிடைக்கும் என்கிறார்கள். உதயநிதியின் டெல்லி அரசியல் நிச்சயமாக கனிமொழிக்கு சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதுமே கட்சிக்காரர்கள் தற்போது உதயநிதி சொல்வதைத் தான் கேட்டு நடந்து வருகிறார்கள்.Go to Delhi and hate the kanimozhi... Neelum Udayanidhi

ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கூட அதிகளவில் இளைஞர்களுக்கு உதயநிதியின் சிபாரிசின் பெயரிலேயே போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டதாகவும், உதயநிதி டிக் அடித்து வாய்ப்பு கேட்ட வேட்பாளர்கள் அனைவருமே தேர்தலில் வென்று விட்டார்கள் என்பதால், இனி உதயநிதியின் கை கட்சிக்குள் பலமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios