Asianet News TamilAsianet News Tamil

திடீர் அரசியல் பிரவேசம் செய்திருக்கும் முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ்..!! கடு கடுக்கும் சாதித்தலைவர்கள்.

   முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ், இணைக்கவுள்ள சாதிகளுக்கெல்லாம் தலைவர்கள் இருக்கும் போது அந்த சாதிமக்களை உடைத்து இவர் ஒரு அமைப்பை உருவாக்குவது அதில் உள்ள சாதி தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் தன் மீது உள்ள கலங்கத்தை போக்கவே இதுபோன்ற சாதி ஆயதத்தை கையில்லெடுத்திருககிறார் ராம்மோகன் ராவ் என்கிற குற்றச்சாட்டை மற்ற சாதி கட்சியினர் முன்வைத்திருக்கிறார்கள்.
 

Former Chief Secretary Rammohan Rao has made a sudden political entry .. !! Caste leaders
Author
Madurai, First Published Feb 8, 2020, 10:24 AM IST

தமிழக அரசின்; பவர்புல் அதிகாரியாக இருந்தவர் தான் ராமமோகன்ராவ். ஜெயலலிதா  ஓபிஎஸ் போன்றவர்கள் முதல்வராக இருந்த போதும் அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரைக்கும் இயக்கியவர் இவர் தான். மணல் Former Chief Secretary Rammohan Rao has made a sudden political entry .. !! Caste leadersகொள்ளையில் ஈடுபட்ட சேகர் ரெட்டியின் பின்னனியில் ராமமோகன் ராவ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே ராமமோகன் ராவ் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்த திருவிளையாடல்கள் எல்லாம் யாரும் மறந்திருக்க முடியாது.  அப்படிப்பட்டவர் திடீரென அரசியல் கட்சி தொடங்கயுள்ளது  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

ராம்மோகன் ராவ் தழிழக அரசின் தலைமைச்செயலாளராக இருந்த போது அவரது வீடு அலுவலகங்களில் எல்லாம் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி முக்கியமான ஆவணங்களை அள்ளிச்சென்றார்கள். அதில் தமிழக அமைச்சர்கள் சிலர் அவருடன் சேர்ந்து மணல் கடத்தில் ஈடுபட்டிருப்பதாக அந்த நேரத்தில் சொல்லப்பட்டது. அந்த வழக்கு இதுவரைக்கும் என்னவாயிற்று என்று தெரியாமல் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.வழக்கு பணி ,ஓய்வுக்கு பிறகு  தனக்கு பின்புலம் வேண்டும் என்பதற்காக சாதியை கையில் எடுக்க தொடங்கியிருக்கிறார் ராம்மோகன்ராவ். இப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களையும் பேசத்தொடங்கியுள்ள அவர்  இன்று, மதுரையில் நடைபெறும் மன்னர் திருமலை நாயக்கர் பிறந்த தினவிழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். அந்த விழாவில் புதிய அரசியல் இயக்கம் ஒன்றை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Former Chief Secretary Rammohan Rao has made a sudden political entry .. !! Caste leaders

மன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை காண நேற்று மதுரை வந்தார் ராமமோகன்ராவ். அப்போது செய்தியாளர்களை பேசியவர்..” அந்நியர்களின் ஆதிக்கத்தில் இருந்து தென்னிந்தியாவை பாதுகாத்தவர் மன்னர் திருமலை நாயக்கர். மதுரையில் சிறப்பான ஆட்சி செய்தவர்.மதுரை மீனாட்சியம்மன் கோவில் நாயக்கர் மகால் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா என அனைத்து திருவிழாக்களையும் உருவாக்கியவர் திருமலை நாயக்கர். அவர் ஆட்சியில் மக்களை ஒருங்கிணைத்தது போல இப்போதும் வரலாற்று தேவை ஏற்பட்டுள்ளது. எனது வழிகாட்டுதலில் உருவாக்கப்படவுள்ள இந்த அமைப்பில்  நாயுடு, நாயக்கர், செட்டியார், ரெட்டியார்,  அந்தணர், அருந்ததியர், இருளர் ,மீனவர் என பல்வேறு சமூக மக்களை ஒருங்கிணைக்க இருக்கிறோம் என்றார்.
இவர் இணைக்கவுள்ள சாதிகளுக்கெல்லாம் தலைவர்கள் இருக்கும் போது அந்த சாதிமக்களை உடைத்து இவர் ஒரு அமைப்பை உருவாக்குவது அதில் உள்ள சாதி தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் தன் மீது உள்ள கலங்கத்தை போக்கவே இதுபோன்ற சாதி ஆயதத்தை கையில்லெடுத்திருககிறார் ராம்மோகன் ராவ் என்கிற குற்றச்சாட்டை மற்ற சாதி கட்சியினர் முன்வைத்திருக்கிறார்கள்.

TBalamurukan
 

Follow Us:
Download App:
  • android
  • ios