Asianet News TamilAsianet News Tamil

அதிகாலை தூக்க கலக்கத்திலேயே அதிமுக முன்னாள் எம்.பி.யை தூக்கிய போலீஸ்... கைதுக்கான பரபரப்பு பின்னணி..!

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவையை சார்ந்தவர் கே.சி பழனிசாமி. இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்து எம்.ஜி.ஆர் உடைய ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பு வகிந்து வந்தார். பின்னர், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆரம்ப காலத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்பு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நீண்ட காலமாக அரசியலில் தொடர்ந்து தன்னை மிகப்பெரிய ஆளாக முன்னிறுத்தி கொண்டவர்.

Former AIADMK MP K.C. Palanisamy arrested background
Author
coimbatore, First Published Jan 25, 2020, 10:57 AM IST

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. 

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவையை சார்ந்தவர் கே.சி பழனிசாமி. இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்து எம்.ஜி.ஆர் உடைய ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பு வகிந்து வந்தார். பின்னர், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆரம்ப காலத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்பு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நீண்ட காலமாக அரசியலில் தொடர்ந்து தன்னை மிகப்பெரிய ஆளாக முன்னிறுத்தி கொண்டவர்.

Former AIADMK MP K.C. Palanisamy arrested background

இதனையடுத்து, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தார் கே.சி.பழனிசாமி. இதையடுத்து பாஜகவின் அழுத்தம் காரணம் அவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும் நீக்கப்பட்ட பின் தொடர்ந்து கட்சியில் இருப்பதாக கூறிவந்தார். ஆனாலும், அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் அக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். மேலும், அதிமுக தலைவர்களை விமர்சித்து பேசினார்.

Former AIADMK MP K.C. Palanisamy arrested background

இந்நிலையில், அதிமுவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி, தான் அதிமுகவில் இணைந்து விட்டதாக கூறி, அதிமுக தலைவர்கள் பலரை விமர்சித்து பேசியதாக சூலூரைச் சேர்ந்த முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி மன்றத் தலைவரான கந்தவேல் அளித்த புகாரின் பேரில் இன்று அதிகாலை கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுக போலி இணையதளம் நடத்தி மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார் எழுந்ததுள்ளது.

Former AIADMK MP K.C. Palanisamy arrested background

இதனையடுத்து, கே.சி.பழனிசாமி மீது 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாசலில் நின்றிருந்த பத்திரிகையாளர்களிடம் அவர் பேச முற்பட்ட போது டிஎஸ்பி, வேனில் ஏறுமாறு அவரைத் தள்ளினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios