Asianet News TamilAsianet News Tamil

அதிமுக முன்னாள் பெண் அமைச்சருக்கு ஸ்கெட்ச் போடும் திமுக... சமாதானம் செய்யும் எடப்பாடி..?

பெரும் நெருக்கடிகளுக்கு இடையே அதிமுக தலைமை வேட்பாளர்களை அறிவித்தது. அதில், தம்பிதுரை, கே.பி.முனுசாமி, யாரும் எதிர்பார்க்காத வகையில் கூட்டணிக் கட்சியின் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் சீனியர்களுக்கு அதிர்ச்சி அடைந்தனர்.  தனக்கு சீட் கிடைக்கும் என்று அசுர நம்பிகையில் இருந்த நேரத்தில் இப்படி நடந்துவிட்டதே என்ற மனவருத்தத்திளிலும், அதிருப்தியிலும் கோகுல இந்திரா இருந்து வருகிறார்.

former AIADMK minister Sketch dmk...edappadi palanisamy shock
Author
Tamil Nadu, First Published Mar 26, 2020, 2:05 PM IST

அதிமுகவில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சீட் வழங்காமல்  தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் கோகுல இந்திரா தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு கோகுல இந்திராவை திமுக பக்கம் இழுக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த பொறுப்பை சிவகங்கையில் அதிகார மையமாக வலம் வந்த முக்கிய பிரமுகரிடம் ஒப்படைக்கப்படுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்கள் அவை தேர்தலில், தி.மு.க 3 இடங்களிலும் அ.தி.மு.க 3 இடங்களிலும் போட்டியிட்டன. தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். ஆனால், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. அதிமுகவில் எம்.பி. பதவியை பிடிக்க மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. மறுபுறம் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, தமாகா மாநிலங்களவை பதவியை வழங்க வேண்டும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது.

இதையும் படிங்க;- மசாஜ் சென்டரில் விபசாரம்... மஜாவாக இருக்கும் விஐபிக்கள், போலீஸ் அதிகாரிகள்.. 2 மணி நேரத்துக்கு ரூ.35...

former AIADMK minister Sketch dmk...edappadi palanisamy shock

பெரும் நெருக்கடிகளுக்கு இடையே அதிமுக தலைமை வேட்பாளர்களை அறிவித்தது. அதில், தம்பிதுரை, கே.பி.முனுசாமி, யாரும் எதிர்பார்க்காத வகையில் கூட்டணிக் கட்சியின் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் சீனியர்களுக்கு அதிர்ச்சி அடைந்தனர்.  தனக்கு சீட் கிடைக்கும் என்று அசுர நம்பிகையில் இருந்த நேரத்தில் இப்படி நடந்துவிட்டதே என்ற மனவருத்தத்திளிலும், அதிருப்தியிலும் கோகுல இந்திரா இருந்து வருகிறார்.

former AIADMK minister Sketch dmk...edappadi palanisamy shock

இதையும் படிங்க;- அதிமுகவில் முதல்வர் பதவிக்காக காத்திருக்கும் அந்த 25 பேர்... அழியபோகும் அம்மா கட்சி..? ஜெ. உதவியாளர்..

இந்நிலையில், சிவகங்கையில் முக்கிய நபராக வலம் வந்த ஒருவர், தற்போது திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். அவர் கோகுல இந்திராவையும் திமுகவில் சேர்க்கும் படலத்தைத் தொடங்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தெரிந்துகொண்ட அ.தி.மு.க தலைமை அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios