பல்வேறு வகை கடன்களுக்கான மாதத்தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதுடன், வட்டியையும் ரத்து செய்யவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் முடங்கிக் கிடக்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, வாடகை கார்கள், டாக்ஸிகள் உள்ளிட்டவைகள் இயங்காது. அத்தியாவசிய போக்குவரத்து, அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே திறந்திருக்கும்.

அரசின் இந்த அறிவிப்புகளால் கிரெடிட் கார்டு, வங்கி கடன் உள்ளிட்ட கடன்களை கட்ட முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வங்கியில் கடன் வாங்கியுள்ள அவர்கள், மூன்று மாதத்திற்கு வங்கி கடனை நிறுத்தி வைக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ், ‘’கொரோனா வைரஸால் பல்வேறு வகை கடன்களுக்கான மாதத்தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதுடன், வட்டியையும் ரத்து செய்யவேண்டும். EMI, காப்பீட்டுக்கான பிரிமியம், கடன் அட்டை தவணைகள், பள்ளிக்கல்விக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.