பிரச்சாரத்தின் போது ராகுல் கழுத்தில் விழுந்த மாலை...! கர்நாடகாவில் வெற்றிதானோ..?!
கர்நாடக மாநிலத்தில்,மே 12 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ராகுல் காந்தி
இதனை தொடர்ந்து தும்கூருக்கு வந்த ராகுல் காந்தி,திறந்தவெளி பிரசாரத்தில் ஈடுபட்டார்.இவரை காண வழி நெடுகிலும் தொண்டர்கள் திரளாக திரண்டனர்.
அப்போது, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ராகுல் காந்தியை நோக்கி கூட்டத்தில் தொண்டர் ஒருவர் தன் கையில் இருந்த மாலையை வீசினார்
அப்போது மாலை மிகச்சரியாக ராகுல்காந்தி கழுத்தில் விழுந்தது. திடீரென ஏதோ தன் மீது விழுந்தது என நினைத்து பயந்த ராகுல்,பின்னர் அது மாலை என தெரிந்ததும் மிகவும் மகிழ்ந்தார்.
இந்த வீடியோ தற்போது வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.மேலும்,இந்த பிரச்சாரத்தில் குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி யும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.