உலகின் தலைசிறந்த முதல்வர் #BestCMOfTheWorld என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வட மாநில முதல்வர்களின் பெயரை குறிப்பிட்டு வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தப்பட்டியலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சத்தீஷ்கர்  முதல்வர் பூபேஷ் பெஹால், சதிரசேகரராவ், நிதிஷ் குமார், பினராயி விஜயன்உத்தவ் , அசோக் ஹெலாட், ஹேமந்த் சோரன், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

இந்த ஹேஸ்டாக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரும் இடம்பெற்றுள்ளது.  அந்தப் பதிவில், இவர் பிறக்கும்போதே தங்கத்தில் ஸ்பூனோடு பிறக்கவில்லை. மிகப்பெரிய அரசியல் பின்னணி இவரது குடும்பத்திற்கு இல்லை. 

திடீரென தமிழக முதல்வராக பதவி வந்தது. ஆனால், மக்களுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார். என பலரும் பல கருத்துக்களை கூறி பதிவிட்டு வருகின்றனர். இந்தப்பட்டியலில் இப்போது முதல்வராக பதவி வகிப்பவர்கள் மட்டுமல்ல, முன்னாள் முதல்வர்கள் பெயரையும் பதிவு செய்து வருகின்றனர். அதில் சந்த்8ரபாபு நாயுடு, லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, ஜெயலலிதா, ஒய்,எஸ். ராஜசேகரரெட்டி உள்ளிட்ட பலரது பெயரும் இடம்பெற்றுள்ளது. 

 

ஆனால், பலமுறை தமிழகத்தை ஆட்சி செய்த மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை யாரும் பதிவு செய்யவில்லை.