Asianet News TamilAsianet News Tamil

அவர் ஒன்றுக்கும் உதவாத குமார்... அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை செமையாக கிண்டலடித்த துரைமுருகன்!

“2003-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தின் அடிப்படை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது  அந்தக் கூட்டணியில் திமுக இருந்தது. அப்போது நீங்கள் அதை எதிர்க்கவில்லை. 30 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எந்த சிறுபான்மை மக்களுக்கும் சிறு இழுக்கு நடந்ததாக உங்களால் சொல்ல முடியுமா? இந்தச் சட்டதால் இஸ்லாமியர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்தச் சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பாதிப்பும் இல்லை.” என்று உதயகுமார் தெரிவித்தார். 
 

Duraimurugan kidding Minister RB Udayakumar on caa issue
Author
Chennai, First Published Jan 8, 2020, 7:30 AM IST

ஆர்.பி.உதயகுமார் ஒன்றுக்கும் உதவாத குமார். அவருக்கு விஷயமே தெரியவில்லை என்று குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாதம் திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் தெரிவித்தார்.

Duraimurugan kidding Minister RB Udayakumar on caa issue
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக திமுக கேள்வி எழுப்பியது. அதற்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,, “2003-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தின் அடிப்படை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது  அந்தக் கூட்டணியில் திமுக இருந்தது. அப்போது நீங்கள் அதை எதிர்க்கவில்லை. 30 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எந்த சிறுபான்மை மக்களுக்கும் சிறு இழுக்கு நடந்ததாக உங்களால் சொல்ல முடியுமா? இந்தச் சட்டதால் இஸ்லாமியர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்தச் சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பாதிப்பும் இல்லை.” என்று தெரிவித்தார். Duraimurugan kidding Minister RB Udayakumar on caa issue
இதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன், “ குடியுரிமை சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அதிலுள்ள திருத்தத்தை எதிர்க்கிறோம். இந்தத் திருத்த சட்டத்தை எதிர்த்து அதிமுக ஓட்டு போட்டிருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது. அகதிகளாக எல்லா மதத்தினரும் வரும்போது, குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் ஏன் ஒதுக்கிவைக்கிறீர்கள்? கேரளாவை போல் இங்கேயும் தீர்மானம் போட்டால் இந்த அரசை நான் பாராட்டுவேன்.” என்று தெரிவித்தார்.

Duraimurugan kidding Minister RB Udayakumar on caa issue
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயகுமார் திமுக மீது குற்றம்சாட்டி கருத்துகளை சொன்னார். பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “ஆர்.பி.உதயகுமார் ஒன்றுக்கும் உதவாத குமார். அவருக்கு விஷயமே தெரியவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவில்லை. ஜெயின், பௌத்தம், கிறிஸ்தவர், பார்சியரோடு சேர்த்து இஸ்லாமியர், இலங்கைத் தமிழரையும் சட்டத் திருத்தத்தில் சேர்க்க வேண்டும் என்கிறோம். அது அவருக்கு புரியவே இல்லை. இந்த விபரங்கள் எல்லாம் தெரியாத அவர் ரொம்ப பாவம்” என கிண்டலடித்தார் துரைமுருகன்.

Follow Us:
Download App:
  • android
  • ios