Asianet News TamilAsianet News Tamil

கட்டணத்தை கேட்டு வாங்கினால் ஆப்பு..!! தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வி இயக்ககம் எச்சரிக்கை..!!

மக்கள் வாழ்வாதாரமின்றி  வெளியில் செல்ல முடியாத இந்த இக்கட்டான சூழ்நிலையில் உடனே  கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்திவருகின்றன. அதை ஒரே தவணையில் செலுத்த வேண்டும்  எனவும் வற்புறுத்துகின்றனர்.   
 

dpi warning to private school regarding fees collection
Author
Chennai, First Published Apr 1, 2020, 12:47 PM IST

பெற்றோர்களிடம் கல்விக்கட்டணம் கேட்டு வற்புறுத்தும் தனியார் பள்ளிகளின் மீது புகார் அளிக்கலாம்  எனவும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இப்புகார்களை  தெரிவிக்கலாம் எனவும் பள்ளிக்கல்வி  இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .  தமிழகத்தில் கொரோனா வைரஸ் எதிரொலியாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் , மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உதவும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .  தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் சுமார் 14 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகள் இயங்குகின்றன இந்நிலையில் கரோனா வைரஸ் தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. 

dpi warning to private school regarding fees collection

அதேநேரத்தில் பள்ளிகளுக்கும் மார்ச் 16ஆம் தேதி முதல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது ,  இத்தகைய சூழ்நிலையில் தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோரிகளிடம் கட்டண வசூல் செய்யக் கூடாது எனவும் மாணவர் சேர்க்கை நடவடிக்கை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும்  பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.  ஆனால் இதையெல்லாம் மீறி சில தனியார் பள்ளிகள் எதிர் வரும் கல்வியாண்டுக்கான கட்டணத்தை இப்போதைய செலுத்த வேண்டும் என பெற்றோர்களிடம்  வற்புறுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது ,  இந்நிலையில்  இது குறித்து புகார் தெரிவிக்கும் பெற்றோர்கள் ,  மக்கள் வாழ்வாதாரமின்றி  வெளியில் செல்ல முடியாத இந்த இக்கட்டான சூழ்நிலையில் உடனே  கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்திவருகின்றன. அதை ஒரே தவணையில் செலுத்த வேண்டும்  எனவும் வற்புறுத்துகின்றனர்.   

dpi warning to private school regarding fees collection

இல்லையென்றால் குழந்தைகளை பள்ளியில் தொடர முடியாது என மிரட்டுவதுடன்,  குழந்தைகளின் எதிர்கால கல்வியை காட்டி எச்சரிக்கின்றனர் எனவும்  பொற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர், எனவே  உடனே அதில்  அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் தனியார் பள்ளி இயக்குனராக அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டதற்கு , ஏற்கனவே இது பற்றி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு வெளியிட்டுள்ள உத்தரவு தெளிவாக சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது , இதை  மீறுபவர்கள் மீது நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,  எனவே இத்தகைய புகார்களை பெற்றோர்கள்  அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் எனவும் புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் அவர் உறுதியளித்துள்ளனர் .
 

Follow Us:
Download App:
  • android
  • ios