பள்ளி வாசல்களை திறந்து வைக்கவேண்டாம்  என தமிழ்நாடு ஜமா அத்துல் உலாமா சபை கேட்டுக் கொண்டுள்ளது. 

இதுகுறித்த அறிவிப்பில், ‘’கண்ணியத்திற்குரிய மாவட்ட வட்டார சபை ஆலிம்கள் மற்றும் மஸ்ஜித்களின் நிர்வாக பொதுமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்திருப்பதால் 144 தடை உத்தரவை அமல்படுத்துவதில் அரசும் காவல்துறையும் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கின்றன. வெளியில் நடமாடுகிற பொதுமக்களும் பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களும், பணியாளர்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர்.

 எனவே பள்ளிவாசல்களின் பாங்கு சொன்ன பிறகு ஸல்லூ ஃபீ  ரிஹாலிகும்- இறைநம்பிக்கையாளர்களே உங்களுடைய வீடுகளில் தொழுது கொள்ளுங்கள் என்று அறிவிப்பு செய்யவும் ஐவேளை ஜமாஅத் தொழுகைகளையும் ஜூம் ஆவையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கவும். ஜும்ஆவுக்கு பதிலாக வீடுகளில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுது கொள்ளுமாறு மக்களுக்கு தெரிவிக்கவும் இது வேறு நெருக்கடியான நேரங்களில் கடைபிடிக்க நம்முடைய அருள் மார்க்கம் கூறும் வழிகாட்டுதல் ஆகும். 

இதனை மீறி நடப்பது சிறப்பானது என கருதவேண்டாம். மக்கள் தம்மையும் தம்மைச் சார்ந்தவர்களை தற்காத்துக்கொள்ள பொறுமை காத்து எச்சரிக்கைகளை கடைபிடிக்குமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மிகுந்த கனிவுடன் கேட்டுக்கொள்கிறது. அல்லாஹ் நம்மையும் நமது நாட்டையும் உலக மக்களையும் கொடிய வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக பாதுகாப்பானாக.

நம்முடைய வாழ்நாளில் சந்தித்திராத இந்த பெரும் சோதனையிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் விரைந்து நம்மோடு நிற்பதோடு நமது பள்ளிவாசல்களில் விபத்துகளால் வெளிச்சம் பெறவும் வழி ஏற்படுத்தி அருள்வானாக’’ என தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் அன்வர் பாஷா உலவி கேட்டுக்கொண்டுள்ளார்