Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி எட்டாவது அதிசயம்... ஐ.டி. துறை ஊழலில் ஒன்பதாவது அதிசயம்... அதிமுகவை வறுத்தெடுக்கும் திமுக!

உதயகுமாருக்கு நான் சவால் விடுகிறேன். பாரத் நெட் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை என்றால், 22.1.2020 அன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட “பாரத் நெட்” டெண்டர் குறித்து உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? தகவல் தொழில் நுட்பச் செயலாளர், தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட அனைவர் மட்டத்திலும் இந்த டெண்டர் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடத் தயாரா? பாரத் நெட் டெண்டர் குறித்த கோப்புகளில் உள்ள குறிப்புகளை அமைச்சரே வெளியிடத் தயாரா?
 

DMK slam Admk minister R.B.Udayakumar on Bharath net tender issue
Author
Chennai, First Published Jan 29, 2020, 9:54 PM IST

பாரத் நெட் டெண்டரில் நடைபெற்றுள்ள திரைமறைவு ரகசியங்களை விசாரித்தால், இந்த டெண்டர் தகவல் தொழில்நுட்பத் துறையின் 9வது ஊழல் அதிசயமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

DMK slam Admk minister R.B.Udayakumar on Bharath net tender issue
“பாரத் நெட் திட்டத்திற்கு இப்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது” என்று ஒரு “பச்சைப் பொய்யை” அமைச்சர் கூறியிருப்பது, அவரும் இந்த ஒட்டுமொத்த “டெண்டர் திருவிளையாடல்களில்” ஆக்கபூர்வமான பங்குதாரராக இருக்கிறார் என்பது தெரிய வந்துவிட்டது. இத்திட்டத்திற்கு நான்கு “பேக்கேஜ்களாக” ஆன்லைன் டெண்டர் 5.12.2019 அன்றே கோரப்பட்டு, அதை சமர்ப்பிக்கும் கடைசி தேதி ஜனவரி 20ம் தேதியுடன் முடிந்துவிட்டது. 22.1.2020 அன்று அந்த டெண்டர் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு, அந்தத் தேதியும் முடிந்துவிட்டது. பிறகு எப்படி அமைச்சர் இப்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று புதிய “கப்சா” ஒன்றை, கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சொல்கிறார்?
இறுதி தேதிக்குப் பிறகு தகவல் தொழில் நுட்பச் செயலாளர் சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் “விருப்ப ஓய்வில்” சென்றதாகச் செய்திகள் வெளிவந்தது ஏன்? 27.1.2020 அன்று அவரும், தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷனுக்கு நிர்வாக இயக்குநராக இருந்த எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ்-ஸும் திடீரென்று “டம்மி” பதவிகளுக்கு பழிவாங்கும் நோக்கில் தூக்கியடிக்கப்பட்டது ஏன்? டெண்டர் இப்போதுதான் கோரப்பட்டுள்ளது என்றால் ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் (DIPR/4685/Tender/2019) என்ன ஆயிற்று? அறிவிக்கப்பட்டபடி 22.1.2020 அன்று மேற்கண்ட அந்த நான்கு பேக்கேஜ்கள் அடங்கிய டெண்டர் திறக்கப்பட்டதா இல்லையா? என அடுக்கடுக்கான கேள்விகள் பாரத் நெட் உள்கட்டமைப்புப் பணிகளின் டெண்டரில் அணி வகுத்து நிற்கின்றன. DMK slam Admk minister R.B.Udayakumar on Bharath net tender issue
பாரத் நெட் திட்ட டெண்டரில் இவ்வளவு அசிங்கமான கூத்துகளையும் அடித்துவிட்டு, தனது துறைச் செயலாளர், நிர்வாக இயக்குநர் எல்லோரையும் சதித் திட்டமிட்டு மாற்றி விட்டு ஒன்றுமே நடக்காததுபோல் அமைச்சர் கூறலாம். ஆனால், கோப்புகள் உண்மையை இப்போது மட்டுமல்ல, எப்போதும் பேசும் என்பதை உதயகுமார் மனதில் நிலைநிறுத்திக் கொள்வது நல்லது. தன் கட்சியின் தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி “எடப்பாடி எட்டாவது அதிசயம்” என்று புகழ்ந்த உதயகுமாரிடமிருந்து இது போன்ற “பொய் அறிக்கையை” எதிர்பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், எங்கள் கழகத் தலைவரை விமர்சிப்பதற்கும் ஒரு யோக்கியதை வேண்டும் என்பதை அவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பாரத் நெட் டெண்டரில் நடைபெற்றுள்ள திரைமறைவு ரகசியங்களை விசாரித்தால், இந்த டெண்டர் தகவல் தொழில்நுட்பத் துறையின் 9வது ஊழல் அதிசயமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.DMK slam Admk minister R.B.Udayakumar on Bharath net tender issue
ஆகவே, உதயகுமாருக்கு நான் சவால் விடுகிறேன். பாரத் நெட் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை என்றால், 22.1.2020 அன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட “பாரத் நெட்” டெண்டர் குறித்து உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? தகவல் தொழில் நுட்பச் செயலாளர், தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட அனைவர் மட்டத்திலும் இந்த டெண்டர் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடத் தயாரா? பாரத் நெட் டெண்டர் குறித்த கோப்புகளில் உள்ள குறிப்புகளை அமைச்சரே வெளியிடத் தயாரா?
அதற்கெல்லாம் உங்களுக்குத் தைரியம் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் 2,000 கோடி ரூபாய்க்கு மேலான பாரத் நெட் டெண்டர் முறைகேடுகளை விசாரித்தால்- அதிமுக ஆட்சியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக் கூடுகள் போல் இதிலும் வெளிவரும். இன்று “அதிகார போதையில்” இதை நீங்கள் மறைக்கலாம். ஆனால், எங்கள் தலைவர் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் அ.தி.மு.க அரசின் ஊழல்கள் நிச்சயம் வீதிக்கு வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” என அறிக்கையில் பெரியசாமி தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios