Asianet News TamilAsianet News Tamil

கொரோனா தடுப்புக்கு ரூ.100 கோடி கொடுக்கணும்... அவதூறு செய்வதாக பாஜகவுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பிய திமுக!

அதில், “தொகுதி வளர்ச்சி நிதியை சொந்த காசாக காட்டிய @arivalayam. இல்லாத தோரணை உருவாக்க 380 கோடி செலவாக்கும் @mkstalin. சொந்த மக்களுக்கு வெறும் ஒரு கோடி கொடுக்கதான் மனசாட்சி உள்ளதா? ஆட்சியில் இருந்து தேன் எடுத்த போது, ஊழல் செய்து புறங்கையை நக்கிய பணத்தை மக்களுக்கும் தாரளமாக கொடுக்கலாமே.” என்று பாஜக கடுமையாக விமர்சித்திருந்தது.
 

Dmk  sent defarmation  notice to bjp for corona issue
Author
Chennai, First Published Apr 1, 2020, 8:48 PM IST

திமுகவைப் பற்றி பொய் பரப்பிய பாஜக, நஷ்டஈடாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.100 கோடியை நிவாரண நிதியாக தமிழக முதல்வருக்கு வழங்க வேண்டும் என அக்கட்சிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.Dmk  sent defarmation  notice to bjp for corona issue
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. திமுக சார்பில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கம் ஒரு மாத சம்பளத்தை தமிழக முதல்வரின் நிவாரணப் பணிக்கு அனுப்பினர். மேலும் தொகுதி மேம்மாட்டு நிதியிலிருந்தும் தடுப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்கினர். திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டது. Dmk  sent defarmation  notice to bjp for corona issue
திமுக ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டதற்கு தமிழக பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவு சார்பாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிடப்பட்டது. அதில், “தொகுதி வளர்ச்சி நிதியை சொந்த காசாக காட்டிய @arivalayam. இல்லாத தோரணை உருவாக்க 380 கோடி செலவாக்கும் @mkstalin. சொந்த மக்களுக்கு வெறும் ஒரு கோடி கொடுக்கதான் மனசாட்சி உள்ளதா? ஆட்சியில் இருந்து தேன் எடுத்த போது, ஊழல் செய்து புறங்கையை நக்கிய பணத்தை மக்களுக்கும் தாரளமாக கொடுக்கலாமே.” என்று பாஜக கடுமையாக விமர்சித்திருந்தது.

Dmk  sent defarmation  notice to bjp for corona issue
இந்நிலையில் திமுகவை அவதூறாகவும் பொய்யைப் பரப்பி விமர்சித்ததாக  அக்கட்சி சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி சார்பில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு திமுக எதுவுமே செய்யவில்லை என தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக அவதூறு பரப்பிய பாஜக கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான 'தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு' 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸை ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தமிழக பாஜக தலைவர் எல். முருகன், ட்விட்டர் நிறுவனத்தின் சர்வதேச மற்றும் இந்திய நிர்வாக இயக்குநர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios