மறந்து போச்சா மருத்துவரே -2 என்கிற தலைப்பில் திமுக நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில், நான் மதிக்கத்தக்க சிறந்த தலைவர் எம்.பி.பி.எஸ் அவர்கள்.  அவரே என்னைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறுகிறார். 

நான் ஜெயலலிதாவிடம் இருந்து பலகோடி ரூபாய் வாங்கி விட்டதாகவும், ரகசிய உடன்பாடு செய்து கொண்டதாகவும் எனது உறவினர்களிடம் கூறி இருக்கிறார். நான் இப்படி செய்வேனா?  இப்படிச்செய்வது பெற்ற தாயோடும் மகளோடும் உடலுறவு வைத்துக் கொள்வதை விட மோசமானது. அந்த கேவலமான செயலை இந்த உடம்பில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும்வரை இந்த ராமதாஸ் செய்ய மாட்டான்ப் என்று அயன்புரம் ரயில்வே ஊழியர்களுக்கான பல்லவர் பேரவையின் ஆண்டு விழாவில் பேசி விட்டு இதயம் வெடித்து அழுதது மறந்து போச்சா மருத்துவரே?

 

அடுத்தடுத்த தேர்தல்களிலும் எத்தனை முறை அதிமுகவுடன் அரசியலுறவு வைத்துக் கொண்டுள்ளீர்கள். எண்ணிப்பாருங்கள் தைலாபுரத்தாரே..’’ என வெளியிடப்பட்டுள்ளது.