பிரியாணி கடை.. செல்போன் கடை.. பியூட்டி பார்லர்.. பஜ்ஜி கடை.. இப்போ பெட்ரோல் பங்க்! தொடரும் திமுகவினரின் அட்ராஸிட்டி!

நேற்றைய முன் தினம், விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின், மா.சே பொன்முடி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

First Published Sep 17, 2018, 6:27 PM IST | Last Updated Sep 19, 2018, 9:28 AM IST

நேற்றைய முன் தினம், விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின், மா.செ பொன்முடி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், திமுக பிரமுகர் கவி மோசஸ் என்பவர், தன்னுடைய இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு அங்கு வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி,  அவர்களிடம் சண்டையிட்ட  சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனனவே, திமுகவினர் பிரியாணி கடை, செல்போன் கடை, பியூட்டி பார்லர், பஜ்ஜி கடை, என பிரச்சனைகள் செய்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில்  தற்போது பெட்ரோல் பங்கிலும் தன்னுடைய அட்ராசிட்டி காண்பித்துள்ளனர். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.