15 ஆண்டுகளாக காதலித்த காதலிக்கு கல்தா கொடுத்த திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம் பெண் போலீஸ் ஸ்டேசன் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

வேலூர் மாவட்டம். அகரம் பகுதியை சேர்ந்தவர் தேவி.இவர் அதே பகுதியை சேர்ந்த திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுதாகரை 15ஆண்டுகளாக காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்ளுவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை ஏமாற்றிவிட்டார் என்று புகார் அளித்திருக்கிறார் தேவி. தேவியிடம் பேசுவதை சுதாகர் நிறுத்திக் திடீரென்று நிறுத்திக்கொண்டார்.எப்படியாவது சுதாகரிடம் பேச வேண்டும் என முயற்சி செய்த தேவிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு முறை சுதாகரிடம் பேச வாய்ப்பு கிடைத்த போது, திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார்.

சென்னை போரூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் தேவி நர்ஸாக வேலை பார்க்கிறார்.. 15 வருஷமாக சினிமாவை மிஞ்சும் அளவிற்கு லவ்  பண்ணிவிட்டு, காலமும் தாழ்த்திவிட்டு, இப்போது வந்து கல்யாணத்தில் இஷ்டமில்லை என்று தேவியிடம் சுதாகர் சொல்லியதாக தெரிகிறது. மேலும் தேவியிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகியும் உள்ளார்.

சுதாகரின் விலகலை தாங்க முடியாத தேவிக்கு  அதிர்ச்சி நாளுக்கு நாள் வேகமெடுத்தது. இதனால் வேலூர் எஸ்பி ஆபீசிலும், வேப்பங்குப்பம் ஸ்டேஷனிலும் புகார் தந்துள்ளார்.. அந்த மனு மீது விசாரணையும் நடந்தது..தேவி சொல்லும்போது.. "நானும் சுதாகரும் சின்ன வயசில இருந்தே காதலித்து வருகிறோம். அவருக்காகத்தான் இத்தனை வருஷம் கல்யாணம் பண்ணாம காத்துக்கிட்டு இருக்கேன்.. எங்க காதல் விசயம் ஊருக்கே தெரியும். ஆனா இப்போ திடீர்னு சொந்தக்கார பொண்ணுகூட கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்கனு சொல்லுறாங்க.என்றாராம்.ஆனால்


 தேவியின் புகாரை சுதாகர் மறுத்ததாக தெரிகிறது.. "இந்திய எல்லை பாதுகாப்புப் படையில் வேலை பார்த்துட்டு வந்தவன், அதை விட்டுட்டு 10 வருஷமாக அரசியலில் இருக்கேன்.. தேவியை காதலிச்சேன்.. ஆனால், ஒரு கட்சி பிரமுகருடன் தேவிக்கு உறவு இருக்கு.. எனக்கு அது பிடிக்கல.. அதனால 5 வருஷத்துக்கு முன்னாடியே தேவியை பிரிஞ்சி வந்துட்டேன் என்றிருக்கிறார்.  சுதாகரோ.! திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தும், தேவியை கேவலமாக பேசியதாக தெரிகிறது. தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாக கூறி அவரையும், குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டினாராம் சுதாகர். இதையடுத்து சுதாகரை கைது செய்ய வலியுறுத்தி வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் தேவி புகார் செய்தார்.

உடனே சுதாகரை அழைத்து 5 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினார். பின்னர் மறுநாள் காவல் நிலையத்திற்கு இரு வீட்டாரையும் போலீசார் அழைத்துள்ளனர். காவல் நிலையத்தில் தேவி குடும்பத்தினர் காத்திருக்க சுதாகர் வரவில்லை. இதையடுத்து காதலனை கைது செய்ய கோரி காவல் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தலைமறைவான சுதாகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.