Asianet News TamilAsianet News Tamil

திமுக முன்னாள் அமைச்சரின் மகனுக்கு 7 ஆண்டு சிறை... சிபிஐ நீதிமன்றம் அதிரடி..!

திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியன் மகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடி அபாரதமும் விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

DMK Former minister son 7 years Jail
Author
Tamil Nadu, First Published Mar 14, 2019, 12:25 PM IST

திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியன் மகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடி அபாரதமும் விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகன், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் சென்னை ஆயிரம்விளக்கு இந்தியன் வங்கியில் உள்ள 8 வங்கி கணக்கில் இருந்து வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.78 கோடி அனுப்பி உள்ளார். DMK Former minister son 7 years Jail

கடந்த 2017-ம் ஆண்டு முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டதால் அமலாக்கப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தி குற்றம்சாட்டப்பட்ட  மணி அன்பழகனக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. DMK Former minister son 7 years Jail

மேலும் அபராதத்தை செலுத்தாத பட்சத்தில் கூடுதலாக ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்க நேரிடும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மணி அன்பழகன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios