கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் அனைத்து தலைவர்களுடனும் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவருகிறார். ஊரடங்கு அறிவித்தவுடனேயே திமுக அதை ஆதரித்தது. ஸ்டாலின் அதை முழுவதுமாக ஆதரித்தவுடன் காங்கிரசின் இந்திய அளவு அரசியலே இதில் முடிந்து போய்விட்டது. வலுவான கூட்டணி கட்சியான திமுக மோடிக்கு ஆதரவளித்ததில் குழம்பிவிட்டது காங்கிரஸ். வேறு வழியில்லாமல் ஆரம்பத்தில் அதை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது.

திமுக கூட்டணி கட்சியினர் விமர்சனம் செய்து வந்த போதும் ஸ்டாலின் மிக ஜாக்கிரதையாக  இந்த பிரச்னையை கடந்து சென்றார். உண்மையிலயே அவர் இதில் எந்த அரசியலும் செய்யவில்லை. ஸ்டாலினின் இந்த அரசியல் செயல்பாடுகள் காங்கிரஸை பெரிதாக அச்சம் கொள்ள வைத்தது. திடீரென ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா ராஜேஷ் செயல்பாடுகள் குறித்து ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசினர். நாடாளுமன்ற கூட்டத்துக்கு டி.ஆர்.பாலுவை அனுப்புவதாக சொன்னதாக கூறி இருக்கிறார்கள். அதைத்தாண்டி பிரதமரும், அமித்ஷாவும் ஸ்டாலின் குடும்ப நலத்தை பற்றி விசாரித்ததாக கூறப்படுகிறது. 

 இந்நிலையில் மு.க.ஸ்டாலின் பாஜக பக்கம் தனது நட்பு முகத்தை காட்ட விரும்புகிறார் எனப்புரிந்து ப.சிதம்பரம் அதிமுக பக்கம் திரும்புகிறார். மு.க.ஸ்டாலின் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளும் நிலையில், தமிழகத்தில் எமர்ஜென்சியை அறிவித்து அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும் பாஜக ஆலோசனை கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.