Asianet News TamilAsianet News Tamil

27 தொகுதிகளில் நிச்சய வெற்றி... திமுக தனித்து வெல்லப்போகும் 15 இடங்கள் இவைதான்..!

லயோலா கல்லூரி முன்னாள் மாணவா்கள் மற்றும் பண்பாடு மக்கள் தொடா்பகம் இணைந்து நடத்திய மக்களவை- சட்டமன்ற இடைத்தோ்தல் கருத்து கணிப்பில் திமுக மட்டும் தனித்து 15 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிய வந்துள்ளது. 

dmk admk bjp congress election survey
Author
Tamil Nadu, First Published Apr 5, 2019, 1:17 PM IST

லயோலா கல்லூரி முன்னாள் மாணவா்கள் மற்றும் பண்பாடு மக்கள் தொடா்பகம் இணைந்து நடத்திய மக்களவை- சட்டமன்ற இடைத்தோ்தல் கருத்து கணிப்பில் திமுக மட்டும் தனித்து 15 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிய வந்துள்ளது. dmk admk bjp congress election survey

கடந்த 17.03.2019 முதல் 03.04.2019 வரை  16 நாட்களாக 40 தொகுதிகளிலும் நான்கு குழுக்களாக பிரிந்து சென்று மக்களை எண்ண ஓட்டத்தை அறிந்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கள ஆய்வு நடத்த்தினர். 21,464  பேரிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி 40 மக்களவை தொகுதிகளில் 27 முதல் 33 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.   அதிமுக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அமமுக கூட்டணி 1 முதல் 2 தொகுதிகளில் வெற்றி பெற வய்ப்பு என்றும்  தெரிவிக்கிறது.dmk admk bjp congress election survey

18 சட்டபேரவைக்கான இடைத்தேர்தலில் திமுக 9 முதல் 11 இடங்களில் வெற்றி பெரும் என்றும், அதிமுக 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு என்றும்,   அமமுக 3 முதல் 4 தொகுதிகளில்  வெற்றி பெற வாய்ப்பு என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றது.

 
அதன்படி மொத்தம் 40 தொகுதிகளில் 20 இடங்களை கூட்டணிக்கட்சிகளுக்கு கொடுத்து விட்டு மீதமுள்ள 20 தொகுதிகளில் களமிறங்கீய திமுக தனித்து 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதன்படி

1. வடசென்னை
2. தென்சென்னை
3. மத்திய சென்னை
4. ஸ்ரீபெரும்புதூர்
5. காஞ்சிபுரம்
6. அரக்கோணம்
7. தருமபுரி
8. கள்ளக்குறிச்சி
9. சேலம்
10 நீலகிரி
11. பொள்ளாச்சி
12 திண்டுக்கல்
13. கடலூர்
14 தஞ்சாவூர்
15 தூத்துக்குடி

கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில்  ஆறு தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

 dmk admk bjp congress election survey

16 திருவள்ளூர் ((தனி)
17. ஆரணி
18. கரூர்
19. விருதுநகர்
20. சிவகங்கை
21. புதுச்சேரி
22. கன்னியாகுமரி

ஐஜேகே கட்சி 
23. பெரம்பலூர்

விசிக
24. சிதம்பரம்

மதிமுக 
25.ஈரோடு 

கொங்கு மக்கள் தேசிய மக்கள் கட்சி
26. நாமக்கல்

மார்க்சிஸ்ட் கட்சி
27.மதுரை

ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. இறுபறியில் உள்ள ஏழு தொகுதிகளில் சிலவற்றில் திமுக கூட்டணி வெல்லும் எனவும் கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios