டேய்! வரிப்புலிகளா படிச்சி வாங்கின கோல்டு மெடல் டா!! இதையும் புடுங்கிடாதீங்க பொங்கி எழும் திவாகரன் ஆதரவாளர்கள்...
ஆயிரம்தான் இருந்தாலும் சசி வகையறாவை ஒரு விதத்தில் பாராட்டியேதான் ஆக வேண்டும்!
எதற்கு தெரியுமோ?...பிரச்னை சூறாவளி சுழற்றி சுழற்றியடித்து வகையாய் தங்களை வெச்சு செய்தாலும் கூட தங்களுடைய இயல்பான வாழ்க்கையின் சந்தோஷங்களை, கொண்டாட்டங்களை, பெருமை மிகு தருணங்கள், கிண்டல் கேலி கூத்து கலாய்கள் எதையுமே அவர்கள் விட்டுத் தருவதில்லை. ரெய்டுக்கு ஆள் வந்திருக்கும் நேரத்திலும் ‘தம்பி கொஞ்சம் உட்காருங்க, இப்பட் வந்திடுறேன்.’ என்றபடி கோமாதா பூஜை நடத்தி அசரவைத்தார் தினகரன்.
திவாகரன் டீமும் இதற்கு சளைத்தவர்கள் இல்லை. ரெய்டு துவங்கிய நான்காவது நாளன்று திவாவின் குடும்பத்தில் செம கொண்டாட்டம். காரணம்? திவாகரனின் மகள் ராஜமாந்தங்கி ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவபடிப்பில் தங்கமெடல் பெற்றிருக்கிறார். இதற்கான பட்டமளிப்பு விழாவில் திவா, அவரது மனைவி, மகன் ஜெய் ஆனந்த் மற்றும் சுற்றம் சூழ கலந்து கொண்டிருக்கிறார். தங்க மெடலுடன் திவாகரனின் மகள் டாக்டர். ராஜமாதங்கி தன் பெற்றோருடன் பெருமை பொங்க போஸ் கொடுக்க, மொத்த குடும்பமும் பெருமை பொங்க கூடி நின்று ஆனந்தப்படும் போட்டோக்கள் இணையத்தில் உலா வருகின்றன.
இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த போட்டோக்களை பகிர்ந்திருக்கும் திவாகரனின் ஆதரவாளர்கள்...
‘டேய் வரிப்புலிங்களா...நல்லா பார்த்துக்குங்க! படிச்சு வாங்குன கோல்டு மெடல் இது. அப்புறம் நாளைக்கு உங்க ஓனர் இந்த தங்கத்துக்கும் கணக்கு கேக்க சொன்னார்ன்னு நாலு நாள் வந்து கெடையா கெடக்க கூடாது.’
- என்று ரெய்டு பஞ்சாயத்தை நினைவூட்டி, டெல்லி லாபியை ஒரு குத்து குத்தியிருக்கின்றனர் .
அந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம்! சரி, படிச்சு மெடல் வாங்குன பெருமைன்னு எடுத்துக்கலாம். ஆனால் அதிலேயும் என்னா நக்கலும், நய்யாண்டித்தனமும்! என்கிறீர்களா?
அதுதானே சசி வகையறாவின் டிரேட் மார்க்.