Asianet News TamilAsianet News Tamil

சுனாமியை விட அச்சுறுத்தல்... மனித குலத்துக்கே எதிரானது... கொரோனா வைரஸ் பற்றி ஓ.பன்னீர்செல்வம்!

இந்த நேரத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அதோடு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியம். வல்லரசு நாடுகள்கூட கொரோன வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. கொரோனா வைரஸால் ஏற்படும் நோயை முற்றிலும் குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுதான் தற்போது உலக சுகாதார அமைப்புக்கும், இந்தியாவுக்கும் மிகப்பெரிய சவால். 

Deputy CM O.Panneerselvam on corona virus
Author
Theni, First Published Mar 31, 2020, 9:01 PM IST

கொரோனா வைரஸ் மனித குலத்துக்கே எதிராக உருவெடுத்துள்ளது. சுனாமியை காட்டிலும் பெரும் அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் உள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.Deputy CM O.Panneerselvam on corona virus
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “நம் நாட்டில் கொரோனா வைரஸ் அதிகமாகவும் வேகமாகவும் பரவிவருகிறது. இதில் கேரளா 2-வது இடத்தில் உள்ளது. மார்ச் 17-ம் தேதிக்கு பிறகு தேனி மாவட்ட எல்லைகள் வழியாக கேரளாவிலிருந்து 50,583 பேர் தமிழகத்துக்கு வந்துள்ளார்கள்.

 Deputy CM O.Panneerselvam on corona virus
எனவே, இந்த நேரத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அதோடு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியம். வல்லரசு நாடுகள்கூட கொரோன வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. கொரோனா வைரஸால் ஏற்படும் நோயை முற்றிலும் குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுதான் தற்போது உலக சுகாதார அமைப்புக்கும், இந்தியாவுக்கும் மிகப்பெரிய சவால். அத்துடன் இந்த வைரஸ் மனித குலத்துக்கே எதிராக உருவெடுத்துள்ளது. சுனாமியை காட்டிலும் பெரும் அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் உள்ளது.

Deputy CM O.Panneerselvam on corona virus
தமிழகத்தில் ஆரம்பக் கட்டத்திலேயே, இதைத் தடுக்கும் பணியை அரசு தொடங்கிவிட்டது. அதனால், பாதிப்பை பெருமளவில் குறைத்திருக்கிறோம். அதே வேளையில் தமிழகம் 3-வது கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் நாம் கவனக்குறைவாக இருந்தால், மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்க நேரிடும். எனவே அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்” என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios