Asianet News TamilAsianet News Tamil

மாணவர் சங்க தலைவர் கண்ணையா மீது நடவடிக்கை டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் ஒப்புதல்!!

டெல்லி ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் கண்ணையா மீது தேசதுரோக வழக்கின் மீது மேல்நடவடிக்கை எடுக்க முதல்வர் ஒப்புதல் அளித்திருப்பது மணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.டெல்லி கலவர சூடு அணைவதற்குள் அடுத்த சூடு மாணவர்களா

Delhi Chief Minister Kejriwal approves the move
Author
Delhi, First Published Feb 29, 2020, 12:50 AM IST

T.Balamurukan

டெல்லி ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் கண்ணையா மீது தேசதுரோக வழக்கின் மீது மேல்நடவடிக்கை எடுக்க முதல்வர் ஒப்புதல் அளித்திருப்பது மணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.டெல்லி கலவர சூடு அணைவதற்குள் அடுத்த சூடு மாணவர்களால் ஆரம்பமாகாமல் பார்க்க வேண்டிய கூடுதல் பொறுப்பு டெல்லிக்கு வந்திருக்கிறது.

Delhi Chief Minister Kejriwal approves the move

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா உள்ளிட்ட ஒன்பது பேர் மீதான தேச துரோக வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து மேல் நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு டெல்லி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 2016இல் நடந்த ஒரு மாணவர் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக கன்னையா குமார் உள்ளிட்டவர்கள் மீது டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் தேச துரோகம் மற்றும் சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் ஜனவரி 2019இல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அஃப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து நடந்த நிகழ்வில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன என்று அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.

Delhi Chief Minister Kejriwal approves the move

டெல்லி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மனோஜ் திவாரி அரவிந்த் கேஜ்ரிவால் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.டெல்லி இந்து - முஸ்லிம் தரப்புகளிடையே மதக் கலவரத்தை சந்தித்துள்ளது."தற்போதைய சூழலை கருத்தில் கொண்டே டெல்லி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது," என்றார்.

Delhi Chief Minister Kejriwal approves the move
டெல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றின் அறிவுறுத்தலின்பேரில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அலுவலகத்துக்கு ஒப்புதல் கோரி கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தது.எனினும் டெல்லி அரசிடம் முறையான ஒப்புதல் பெற்ற பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.இந்த நிலையில் 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள கெஸ்ரிவால் மாணவர் சங்கத்தலைவர் மீது மேல்நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளித்திருப்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios