Asianet News TamilAsianet News Tamil

நண்பரை தலைவராக ஏற்றுக்கொண்ட அன்பழகன்... சூழ்ச்சிகளை வென்ற 75 ஆண்டுகால நட்பு..!

மறைந்த கருணாநிதிக்கும், அன்பழகனுக்கு எத்தனையோ மனஸ்தாபங்கள் இருந்தாலும் இந்த 75 ஆண்டுகால நட்பில் அவர்கள் வெளியே ஒருவரை பற்றி ஒருவர் குறைவாக பேசிக் கொண்டதே இல்லை. 

Dear friend who accepted his friend as leader ... 75 years of friendship won
Author
Tamil Nadu, First Published Mar 7, 2020, 11:11 AM IST

மறைந்த கருணாநிதிக்கும், அன்பழகனுக்கு எத்தனையோ மனஸ்தாபங்கள் இருந்தாலும் இந்த 75 ஆண்டுகால நட்பில் அவர்கள் வெளியே ஒருவரை பற்றி ஒருவர் குறைவாக பேசிக் கொண்டதே இல்லை.

 Dear friend who accepted his friend as leader ... 75 years of friendship won

1942-ல் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் ஆண்டுவிழா - திருவாரூரில் நடந்தது. இந்த விழாவுக்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்த்துப் பா எழுதி அனுப்பினார். அந்த விழாவில் கலந்துகொண்ட வி.ஐ.பி பேராசிரியர் அன்பழகன். அப்போது தொடங்கிய அந்தத் தோழமை கருணாநிதியின் இறுதிநாள் வரை தொடர்ந்தது. Dear friend who accepted his friend as leader ... 75 years of friendship won

தி.மு.க-வை கலாசாரக் கழகமாக மாற்றலாம் என்றனர் சிலர். கருணாநிதி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. கப்பல் கேப்டன் மூழ்கும் கப்பலை விட்டுச் செல்வதில்லை என்றார். எமர்ஜென்சி காலத்தில் அதை எதிர்த்த கருணாநிதியின் போர்க்குணம்தான், தி.மு.க-வில் கருணாநிதியின் தலைமையை அதுவரை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் ஏற்க வைத்தது. அதன்பிறகுதான் பேராசிரியர் அன்பழகன், ``தன் நண்பர் கருணாநிதியை தலைவர் கருணாநிதியாக ஏற்றுக்கொண்டேன்” என்று இப்போதும் சொல்வார். 
 
Follow Us:
Download App:
  • android
  • ios