கொரோனா தடுப்பு பணிகளுக்காக முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து ரூ.10 லட்சம்  நிவாரண நிதியை வழங்கினார்.

தமிழக அரசியலில் அதிரடிக்கு பெயர் போன மு.க.அழகிரி, ஸ்டாலினால் ஒதுக்கப்பட்டு இப்போது அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். தற்போது என்ன செய்கிறார்? அவரது அரசியல் நிலைப்பாடு என்ன? ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் செல்வாரா?  என்பது தெரியாமல் அவரது ஆதரவாளர்கள் மண்டையை பிய்த்துக் கொண்டுள்ளனர். அண்மையில் மறைந்த க. அன்பழகனின் இறுதிச் சடங்கு உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளுக்கும் அவர் போகவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி முதல்வர் எடப்பாடியும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆகையால், பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை மு.க.அழகிரி வழங்கியுள்ளார்.