Asianet News TamilAsianet News Tamil

உச்சகட்ட பதற்றம்.. முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் ஆலோசனை.. பிரதமர் மோடி முக்கிய முடிவு எடுக்க திட்டம்..?

கொரோனா பாதிப்பு எதிரொலியாக பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல் மற்றும் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடாவுடன் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை ஊரடங்கு நீட்டிப்பா? அல்லது அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தபடுமா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

coronavirus... pm modi calls up former presidents,prime ministers
Author
Delhi, First Published Apr 5, 2020, 4:49 PM IST

கொரோனா பாதிப்பு எதிரொலியாக பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல் மற்றும் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடாவுடன் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை ஊரடங்கு நீட்டிப்பா? அல்லது அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தபடுமா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  கடந்த மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப பாதிப்பு மற்றும் பரவல் கட்டுக்குள் வரும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இதுவரை இந்தியாவில் 3,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 79 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 267 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டிலேயே கொரோனா வைரஸால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக  மகாராஷ்டிரா இருந்து வருகிறது. 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

coronavirus... pm modi calls up former presidents,prime ministers

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்புடைய விவகாரங்கள் பற்றி முன்னாள் குடியரசுத் தலைவர்களான பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதீபா பாட்டீல் மற்றும் முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடா ஆகியோருடனும் கொரோனா குறித்து தொலைபேசி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். 

coronavirus... pm modi calls up former presidents,prime ministers

இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் யாதவ், மாயாவதி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை ஈடுபட்டதால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை ஊரடங்கு நீட்டிப்பா? அல்லது அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தபடுமா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios