Asianet News TamilAsianet News Tamil

கொரோனா வைரஸ் ஆண்களேயே அதிகம் தாக்குமாம்.? ஆராய்ச்சி முடிவுகள் என்ன தான் சொல்லுகிறது.

கொரோனா வைரஸ் ஆண்களேயே அதிக அளவில் தாக்குவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.உலகம் முழுவதும் சுமார் 59ஆயிரம் பேரை காவுவாங்கியிருக்கிறது கொரொனா.195 நாடுகளை வாரிசுருட்டி போட்டிருக்கிறது இந்த கொரோனா.

Coronavirus is more likely to attack males. That's what the research results say.
Author
China, First Published Apr 4, 2020, 11:01 AM IST

T.Balamurukan

கொரோனா வைரஸ் ஆண்களேயே அதிக அளவில் தாக்குவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.உலகம் முழுவதும் சுமார் 59ஆயிரம் பேரை காவுவாங்கியிருக்கிறது கொரொனா.195 நாடுகளை வாரிசுருட்டி போட்டிருக்கிறது இந்த கொரோனா.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Coronavirus is more likely to attack males. That's what the research results say.

கொரோனாவால் பலியானவர்களில் பாலின விகிதம் குறித்து ஆராய்ச்சி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில், பெண்களை விட ஆண்கள் மூன்று மடங்கு உயிரிழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்றால் மரணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 3.4 சதவீதமாக இருக்கும்பட்சத்தில் ஆண்களின் இறப்பு எண்ணிக்கை 9.2 சதவிகிதமாக உயர்ந்து காணப்படுகிறது. இது தவிர, கொரோனா பாதித்த இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பலியானவர்களில் 71 சதவீதம் பேர் ஆண்கள் என கண்டறியப்பட்டுள்ளது.மேலும் இதற்கு பலியாகும் வீதத்தில் பெண்களை காட்டிலும், ஆண்களுக்கு 50 சதவீதம் அதிகம் இருக்கவாய்ப்பு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஆண்கள் அதிக அளவில் பலியாக உறுதியான காரணம் எதுவும் அறியப்படாவிட்டாலும், புகைபிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு அதன் மூலம் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. காய்ச்சல், இருமல் போன்றவை பொதுவான அறிகுறிகளாக காணப்பட்டுவதால் அது ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் குறைவு காரணமாக கூட இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
Follow Us:
Download App:
  • android
  • ios