Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 67 ஆக உயர்வு..!! அனைத்து கட்சி கூட்டமெல்லாம் வேஸ்ட்.. முதல்வர் எடப்பாடி பேட்டி.!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நேற்று வரை 50 பேருக்கு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகி மொத்தம் 67 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

Coronal death toll rises to 67 in Tamil Nadu .. Waste all party meeting .. Interview with CM Edapady !!
Author
Tamil Nadu, First Published Mar 30, 2020, 3:26 PM IST

T.Balamurukan
சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது பேசியவர்...,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நேற்று வரை 50 பேருக்கு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகி மொத்தம் 67 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

Coronal death toll rises to 67 in Tamil Nadu .. Waste all party meeting .. Interview with CM Edapady !!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 5 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 25 லட்சம் என்- 95 முகக் கவசங்கள் வாங்கவும்  உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது. 1.5 கோடி முகச்கவசங்கள் வாங்குவதற்கு தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது.

Coronal death toll rises to 67 in Tamil Nadu .. Waste all party meeting .. Interview with CM Edapady !!

வீட்டு வாடகைதாரர்களின் பிரச்சினை பரிசீலிக்கப்படும். கொரோனாவுக்கு ஒரே தடுப்பு மருந்து மக்கள் தங்களே தனிமைப்படுத்தக்கொள்வதுதான். கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்படும். பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு நன்றாகவே இருக்கிறது.கொரோனா பரவலில் தமிழகம் 2வது கட்டத்திலிருந்து 3வது கட்டத்துக்கு செல்லாமல் தடுக்கும் பணியில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. கொரோனா விஷயத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அரசியல் செய்வது என்பது தேவையற்றது.என்று பேட்டியளித்திருக்கிறார் முதல்வர்.

Follow Us:
Download App:
  • android
  • ios