Asianet News TamilAsianet News Tamil

டெல்லி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் தமிழகத்தில் அதிகம் பரவிய கொரோனா... மீதமுள்ள 681 பேர் எங்கே..?

தமிழகத்திற்கு இஸ்லாமியர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என தமிழக சுகாதாரத்துறை கவலையடைந்துள்ளது.
 

Corona spread to Tamil Nadu by Muslims ... Where are the 681 people participating in the Delhi Jamaat Conference?
Author
Tamil Nadu, First Published Mar 30, 2020, 2:52 PM IST

தமிழகத்திற்கு இஸ்லாமியர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என தமிழக சுகாதாரத்துறை கவலையடைந்துள்ளது.

டெல்லியின் நிஜாமுதீனில் நடந்த தப்லிஹி ஜமாத் மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் 1500 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடமிருந்தே தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக தமிழக சுகாதார அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். அவர்களிடம் இருந்து மேலும் தமிழகத்தில் கொரோனா பரவுவதற்காக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் பரவுகின்றன.

 Corona spread to Tamil Nadu by Muslims ... Where are the 681 people participating in the Delhi Jamaat Conference?

தாய்லாந்து நாட்டினர் நடத்திய அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களை சோதனைக்கு உட்படுத்திய போது அதிக நபர்களுக்கு கொரோனா தொற்று பாசிட்டிவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. 

மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களை கண்டுபிடித்து அவர்களில் 17 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில்  16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. அவர்களில் 14 பேர்  ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஆகையால் தான் ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தில் இல்லாத அளவுக்கு அதிகம் பேர் தனிமை படுத்தி பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் அந்த மாவட்டம் சிறப்பு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. Corona spread to Tamil Nadu by Muslims ... Where are the 681 people participating in the Delhi Jamaat Conference?

டெல்லியில் நடைபெற்ற ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த 1500 பேரில்  819 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை கண்டு பிடிக்கும் பணியில் தமிழக் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. அவர்களில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோட், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். 


பட்டியலில் மீதமுள்ளவர்களையும் கண்டு பிடிக்க போலீசார் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். Corona spread to Tamil Nadu by Muslims ... Where are the 681 people participating in the Delhi Jamaat Conference?அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நேற்று 8 பேருக்கு நடந்த தீவிர சோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்கள் ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி, பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகையால் அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், பயணம் செய்தவர்களுடன் இருக்கும் நபர்கள் தாமாக முன் வந்து தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். Corona spread to Tamil Nadu by Muslims ... Where are the 681 people participating in the Delhi Jamaat Conference?

"அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், அவர்களது தற்போதைய நிலை குறித்தும் அறிய வேண்டியதிருக்கிறது.  மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் தன்னார்வத்துடன் முன் வந்து தங்களை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும். இதனை மிகப்பெரிய குற்றமாக கருதவில்லை. தாமாக முன் வந்து தெரிவிக்காவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios