Asianet News TamilAsianet News Tamil

இவருக்கு மட்டும் வாழையில இட்லி... மற்றவர்களுக்கு வெறும் தட்டு... பல்லிளிக்கும் வீரமணியின் சமத்துவம்..!

சூரிய கிரகணம் தொடர்பான மூட நம்பிக்கைகளை முறியடிக்கும்  நிகழ்ச்சியில் தி.க.தலைவர் கி.வீரமணி சாப்பாட்டில் காட்டிய சமத்துவம் சர்ச்சையாகி இருக்கிறது. 

Controversy over the eclipse of solar eclipse
Author
Tamil Nadu, First Published Dec 26, 2019, 12:25 PM IST

சூரிய கிரகணம் தொடர்பான மூட நம்பிக்கைகளை முறியடிக்கும் விதமாக சென்னை வேப்பேரி பெரியார் திடலில் திராவிட கழகத்தினர் சார்பில் சிற்றுண்டி உண்ணும் நிகழ்வு நடைபெற்றது.  சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் வெளியே வரக்கூடாது என்றும் உணவு உண்ணக்கூடாது என்னும் பல மூட நம்பிக்கைகளை இருப்பதால், அதை பொய் என விளக்கும் நடைமுறை வகுப்பு நடைபெற்றது.Controversy over the eclipse of solar eclipse

அதன் ஒரு அங்கமாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சூரிய கண்ணாடி மூலம் கிரகணத்தைப் பார்த்தார். அதன்பின் திராவிட கழகத்தினருடன் ஒன்றுகூடி சிற்றுண்டி உண்டு மூட நம்பிக்கைகளை முறியடிக்கும் விதமாக சிற்றுண்டி உண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, “சூரியன் சந்திரன் பூமி ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு தான் கிரகணம். இது முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமான நிகழ்வு. கிரகணத்தை மூட நம்பிக்கையாக பின்பற்றுவது தவறு என்பதை உணர்த்த தான் இந்த நடைமுறை வகுப்பை திராவிட கழகத்தினர் நடத்திக் காட்டுகிறோம்” எனத் தெரிவித்தார்.Controversy over the eclipse of solar eclipse

 அனைவரின் வாழ்க்கையிலும் அறிவியல் உள்ளதாகவும் ஆனால் அறிவியல் பூர்வமான சிந்தனைகள் இல்லை என்பதை உணர்த்தவே இந்த சிற்றுண்டி உண்டு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை விளக்கும் நடைமுறை வகுப்பாக திராவிட கழகத்தினர் இதை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்த நிகழ்வின்போது வீரமணி சாப்பிட்டுக் கொண்டே இருந்தார். சாப்பிட்டுக்கொண்டே செய்தியாளர்களையும் அவர் சந்தித்தார். அப்போது அவரும், அவருடன் மற்றொருவரும் தட்டில் வாழை இலை விரித்து சாப்பிட மற்றவர்கள் வெறும் தட்டில் வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். Controversy over the eclipse of solar eclipse

அவர்கள் இருவரும் மட்டும் தட்டில் இலைவிரித்து சாப்பிட்டதை பார்த்தவர்கள் இதுதான் தி.க.வீரமணியின் சமத்துவமா என விமர்சித்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios