Asianet News TamilAsianet News Tamil

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் வரணும்... கே.எஸ். அழகிரியின் சரண்டர் விளக்கம்!

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்த என்னுடைய அறிக்கைக்கும் எந்த சம்பந்தம் இல்லை. அது முழுக்க முழுக்க உள்ளாட்சித் தேர்தல் தொடர்பானது மட்டுமே. திமுகவுடனான கூட்டணி என்பது கொள்கை ரீதியிலான கூட்டணி; மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கக்கூடிய கூட்டணி ஆகும். அந்த அறிக்கையில் யாருக்கு எதிராகவும் எதுவும் சொல்லவில்லை.  திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் நல்ல உறவுவும் நல்ல புரிதல் உண்டு. 

congress leader K.S.Alagiri on dmk - congress alliance
Author
Chennai, First Published Jan 17, 2020, 8:08 AM IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று முதல்வராக வரவேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு  மாற்று கருத்து கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். congress leader K.S.Alagiri on dmk - congress alliance
டெல்லியில் இரு தினங்களாக முகாமிட்டிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, சென்னை திரும்பினார்.  விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “தமிழகத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம், தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்து என்னுடைய கருத்துகளை அகில இந்திய தலைமையிடம் தெரிவித்தேன். கூட்டணி தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் என்ன பேசினார் என்று எனக்கு முழுமையாகத் தெரியாது. அதை முழுமையாகத் தெரிந்துகொண்டபிறகு என்னுடைய கருத்துகளை தெரிவிக்கிறேன்.

congress leader K.S.Alagiri on dmk - congress alliance
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்த என்னுடைய அறிக்கைக்கும் எந்த சம்பந்தம் இல்லை. அது முழுக்க முழுக்க உள்ளாட்சித் தேர்தல் தொடர்பானது மட்டுமே. திமுகவுடனான கூட்டணி என்பது கொள்கை ரீதியிலான கூட்டணி; மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கக்கூடிய கூட்டணி ஆகும். அந்த அறிக்கையில் யாருக்கு எதிராகவும் எதுவும் சொல்லவில்லை.  திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் நல்ல உறவுவும் நல்ல புரிதல் உண்டு. 

congress leader K.S.Alagiri on dmk - congress alliance
இரு கட்சிகளிலும் கடை நிலையில் உள்ளவர்களுக்கு பல சிரமங்கள் இருக்கின்றன. போதுமான இடங்களைப் பெறவில்லை என்ற ஆதங்கமும் எங்களிடத்தில் இருக்கிறது. இடங்களை கொடுக்க முடியாமல் அவர்களும் சிரமப்படுகிறார்கள். இதுதான் உண்மையான நிலை. திமுக தலைமை அறிவுறுத்திய இடங்கள்கூட வழங்கப்படவில்லை. அதற்கு கட்சி தலைமையைக் காரணம் சொல்ல முடியாது. அங்குள்ளவர்களே காரணம். சிரமங்களைச் சொல்ல வேண்டியது எங்கள் கடமை. இதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை.

congress leader K.S.Alagiri on dmk - congress alliance
திமுக தலைவர்கள் மரியாதைக்குரியவர்கள். காங்கிரஸ் தலைவர்களை திமுகவினர் மதிக்ககூடியவர்கள். அதில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. திமுக-காங்கிரஸ் இடையே எந்த விஷயத்திலும் கருத்து வேறுபாடே இல்லை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று முதல்வராக வரவேண்டும் என்பதிலும் மாற்று கருத்து எங்களுக்குக் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட சங்கடத்தைச் சொல்கிறோம். இதில் தவறு எதுவும் இல்லை. திமுகவுக்கும் சில சங்கடங்கள் இருக்கலாம். இதையெல்லாம் திமுக- காங்கிரஸ் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை’ என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios