Asianet News TamilAsianet News Tamil

காவலர்களும் மனிதர்கள் தான்.. மனசாட்சியோடு செயல்படுங்க மக்களே..! முதல்வர் எடப்பாடி உருக்கம்..!

இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8மணி நேரம் நிற்கிறார்கள். தொடர்ந்து 21நாட்கள் என்றால் அவர்களும் மனிதர்கள் தானே. எனவே மக்கள் மனசாட்சியோடு எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால், அவர்களுக்கும் நல்லது; குடும்பத்திற்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது

cm palanisamy tweet about policemen
Author
Tamil Nadu, First Published Apr 7, 2020, 9:51 AM IST

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 உயர்ந்து 621 ஐ எட்டியிருக்கிறது. இதுவரையில் தமிழ்நாட்டில் 6 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து இரண்டாம் இடம் வகித்து கொண்டிருக்கின்றது.

cm palanisamy tweet about policemen

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே இரவு பகல் பாராமல் பாதுகாப்பில் இருக்கும் காவலர்களின் பணிச்சுமையை மனதில் கொண்டு மக்கள் மனசாட்சியோடு செயல்பட வேண்டும் என்றும் அரசு போடும் உத்தரவுகள் அனைத்தும் மக்களின் நலனிற்காக தான் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். 

 

இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில், 'இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8மணி நேரம் நிற்கிறார்கள். தொடர்ந்து 21நாட்கள் என்றால் அவர்களும் மனிதர்கள் தானே. எனவே மக்கள் மனசாட்சியோடு எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால், அவர்களுக்கும் நல்லது; குடும்பத்திற்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது. அரசு ஒரு உத்தரவு போடுகிறது என்றால் அது மக்கள் நலன் கருதி தான் என்பதை மக்கள் உணர வேண்டும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய கடமையை உணர்ந்து, நோயினுடைய தன்மையை, தாக்கத்தை உணர்ந்து, தடை உத்தரவை கடைபிடித்தால் நிச்சயம் கொரோனா தொற்றை தடுக்க முடியும்' என்று பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios