Asianet News TamilAsianet News Tamil

குடியுரிமைச் சட்டம் எங்க ஸ்டேட்ல செல்லாது !! சட்டத்தை அமல்படுத்த மாநிலங்களை வற்புறுத்த முடியாது !! மம்தா பானர்ஜி அதிரடி !!

பாஜகவால்  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்படி எந்த மாநிலத்தையும் வற்புறுத்த முடியாது என்றும், இந்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் செயல்படுத்த முடியாது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

citizenship Amendment act not implemented in west bengal
Author
Kolkata, First Published Dec 14, 2019, 7:24 AM IST

மேற்குவங்க மாநில முதலமைச்சரும், , திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, நாங்கள் இந்த மாநிலத்தில் இந்திய குடிமக்கள் தேசிய பதிவேடுக்கான கணக்கெடுப்பு நடத்த அனுமதிக்கமாட்டோம். அதேபோல குடியுரிமை சட்டத்தையும் அனுமதிக்கமாட்டோம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நாங்கள் அமல்படுத்தமாட்டோம் என்று அதிரடியாக தெரிவித்தார்.
.citizenship Amendment act not implemented in west bengal
மாநிலங்கள் இதனை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக மிரட்டி வற்புறுத்த முடியாது. குடியுரிமை சட்டம் இந்தியாவை பிரித்துவிடும். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை இந்த மாநிலத்தில் உள்ள ஒரு நபர் கூட நாட்டை விட்டு வெளியேறமாட்டார். குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

citizenship Amendment act not implemented in west bengal

அசாம் மாநிலத்துக்கு வருவதாக உள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, ஒருவேளை தனது திட்டத்தை கைவிட்டால் அது இந்தியாவின் தன்மானத்தில் படிந்த கறையாகிவிடும்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்ல இருந்த எனது பயணத்தையும் ரத்து செய்துவிட்டேன் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios