விருது நகர் மாவட்ட திமுக இளைஞரணி பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஆ.ராசா,’’பெரியாருடைய கொள்கையில் எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் எல்லா மதத்திலும் மூடநம்பிக்கை இருக்கிறது.  ஏனென்றால் அடிப்படைக் காரணம் பெளத்தம் சமண மதத்தை தவிர மற்ற மதங்கள் இந்த உலகத்தை கடவுள் படைத்தார் எனச் சொல்கிறது.  மனிதனை கடவுள் படைத்தார் ஆணுடைய விளா எலும்பில் இருந்து பெண்ணை படைத்தார் என பைபில் சொல்கிறது. அப்புறம் ஆகாயத்தை படைத்தார்... சூரியனை படைத்தார்.  ஆக எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் இந்த பிரபஞ்சத்தை கடவுள் படைத்தார் என்பது தத்துவம்.  அந்தத் தத்துவம் உண்மை அல்ல  என்பது இன்றைக்கு தெரிந்து விட்டது.  ஆக இந்து மத்தத்தில் மட்டுமல்ல கிருஸ்தவத்திலும், இஸ்லாமியத்திலும் மூட நம்பிக்கை இருக்கிறது. அதனை நாம் ஏற்றுக் கொள்வது இல்லை.

 

ஆனால் ஏசு கிருஸ்து தோன்றியதற்கு ஆதாரமிருக்கிறது.  இஸ்லாமியத்தில் முகம்மது நபி ஷல் தோன்றியதற்கு வரலாற்று ஆவணம் இருக்கிறது. அவர்கள் சொன்ன போதனைகள் உண்மையா? பொய்யா? என்கிற விமர்சனம் அப்புறம்.  ஆனால் அவர்கள் பிறந்த நாள் கிருஸ்துமஸ்.  இவர் பிறந்த நாள் ரம்ஜான். பகுத்தறிவு ரீதியாக ஏசு பிறந்தார். அவர் சில கொள்கைகளை சொன்னார். அந்தக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடோ இல்லையோ? ஆனால் அது உண்மை. சரித்திர நிகழ்வு. அந்த மார்க்கத்தை உள்ளவர்களுக்கு வாழ்த்து சொல்வது மனித நேயம்.

 

இஸ்லாம் இறைத்தூதர் சொன்னதை கேட்கச் சொன்னது. ஒரு நெறியை சொன்னார். அதை அந்த சமுதாயம் கடைபிடித்து வருவதால் ரம்ஜானுக்கு வாழ்த்துகள் சொல்கிறோம்.  இப்போது இந்துக்களுக்கு எதை வாழ்த்து சொல்வீர்கள்.  தீபாவளிக்கு எதுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும்?  பெரியார் என் சொன்னது போல ஓரளவுக்கு பகுத்தறிவு இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டியது  நல்லா தெரிஞ்சுக்கோங்க அசுரன் என்றாலே அவன் திராவிடன். தேவர்கள் என்றால் பிராமணன். இந்த தேவர்களுக்கும், அசுரனுக்கும் நடந்த போராட்டம் தான் நடந்த போராட்டம் தான் உன்மையான மனித குலப்போராட்டம்.  அப்படி இருக்கையில் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும்? 

பத்மாசூரன் என்கிற திராவிடன் இந்தப்பூமியை பாயாக சுருட்டினான்  எனக் கூறப்படுகிறது. ஆக அங்கேயே பிரச்னை ஆரம்பித்து விடுகிறது.  இந்த பூமியை யாராவது பாயாக சுருட்ட முடியுமா? உலகம் உருண்டையா? இல்லையா? உலகம் உருண்டை என்று 1600ல் புருனோ என்கிற கிருஸ்தவன் சொன்னான்.  புருனோ சொன்னபோது கிருஸ்தவ மதம் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது புருனோவை கிருஸ்தவ மதம் உயிரோடு கொளுத்தியது.  பிறகு அறிவியலை உணர்ந்து கிருத்தவ மதம் புருனோவுக்கு சிலை வைத்து. ஆனால் பத்மாசூரன் உலகத்தை உருட்டி சமுத்திரத்தில் சொறுகி வைத்ததாக கூறுகிறார்கள்.  உலக உருண்டையில் சமுத்திரம் எங்கே இருக்கிறது? 

உடனே தேவர்கள் கிருஷ்ணரிடம் போய் முறையிடுகிறார்கள். அவர் பன்றி உருவமெடுத்து சமுத்திரத்துக்கு செல்கிறார். அப்படி மீட்கிறபோது அந்த பூமாதேவிக்கும் பன்றிக்கும் காதல் வருகிறது.  காமம் வருகிறது. அவர்கள் இரண்டு பேரும் ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்கிறார்கள்.  அந்தப்பிள்ளை தான் நரகாசுரன். அந்த நரகாசுரன் தேவர்களுக்கு எதிராக இருந்தான். எவன் எவனெல்லாம் பிராமணர்களுக்கு எதிராக இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் கொல்ல வேண்டும். உடனே வதம் செய்து நரகாசுரனை எரித்தார்கள். இதுதான் கதை. இப்போது சொல்லுங்கள் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும்? ‘’என கேள்வி எழுப்பியுள்ளார்.