செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கியவர்தான் தமிழ்நாடில் தாமரையை மலர வைக்கப்போறாரா?: லேடி அமைச்சரிடம் கொதிக்கும் சின்மயி

சின்மயி பிஸியான பாடகியாக இருந்தபோது பிரபலமானதை விட, இப்போது சோஷியல் மீடியாவில் சக சினிமா துறையினரை போட்டுப் பொளப்பதன் முலம்தான் தினம் தோறும் வைரலாகிக் கொண்டே இருக்கிறார்.
 
கவிப்பேரரசு! எனும் பிரம்மாண்ட பெயருடன் தமிழக சினிமா, இலக்கிய, அரசியல் வட்டாரங்களில் கம்பீர நடை போட்ட கவிஞர் வைரமுத்துவை, வைரஸ் ஃபீவரில் விழுந்தவர் போல் வாடி வதங்கிட வைத்தவர்தான் பாடகி சின்மயி. தமிழகத்தில் ‘மீடூ’ விவகாரம் பற்றி எரிவதற்கு காரணமான தீக்குச்சியே இவர்தானே! 

வைரமுத்துவோடு விடவில்லை, தமிழக சினிமா துறையின் முக்கிய நபர்கள் யாராவது முறைகேடுகளில் சிக்கினால் உடனே சோஷியல் மீடியாவில் தொங்கவிட்டு உரித்தெடுப்பது சின்மயிக்கு வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் இப்போது, பா.ஜ.க.வில் இணைந்திருக்கும் ராதாரவியை பின்னி எடுத்துள்ளார். அதுவும் அவரைப் பற்றி தான் பற்ற வைத்திருக்கும் நெருப்பை, மத்திய பெண் அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கவனத்துக்கும் டேக் செய்துள்ளதுதான் ஹிட்டே. 

தன் ட்விட்டரில் ராதாரவியை பற்றி சின்மயி எழுதியிருப்பதாவது....”மேடைதோறும் பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில் பேசிவரும் ராதாரவி உங்கள் கட்சியில் சேர்ந்துள்ளார். தமிழ்நாடு டப்பிங் யூனியன் தலைவராக இருக்கும் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களையும், சங்கத்தின் பணத்தில் முறைகேடுகளை செய்ததாகவும், புகார் அளித்தவர்களை பணி செய்ய விடாமல் தடை விதித்துள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

சின்மயியின் சீற்றம் ராதாரவியை ரவுசாக்கியுள்ளது. நயன் தாராவை பற்றி மேடையில் அவர் வம்பு பேச, அதனால் எழுந்த பிரச்னையால் தி.மு.க. அவரை கழற்றிவிட்டது. பின் மீண்டும், அ.தி.மு.க.வில் இணைந்தார். அங்கிருந்தும் கழன்று பா.ஜ.க.வில் இணைந்தவருக்கு முதல் நாளிலேயே செம்ம கடுப்பை காட்டிவிட்டார் சின்மயி.

சின்மயியின் கோபம் ‘செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கியவர்தான் தமிழ்நாட்டில் தாமரையை மலர வைத்து, பா.ஜ.க.வை அரியணையில் உட்கார வைக்கப் போகிறாரா? இவரை எல்லாம் ஏன் கட்சியில சேர்த்தீங்க?’ங்கிற ஸ்டைலில் உள்ளதாக தி.மு.க.வினர் கிண்டலடிக்கின்றனர் ராதாரவியையும், பா.ஜ.க.வையும். 

-    விஷ்ணுப்ரியா