Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவில் இருந்து விடுதலை... படு குஷியில் சீனா.., இயல்பு நிலைக்கு திரும்பியதாக சீன அரசு அறிவிப்பு.!

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உச்சகட்டத்தில் இருந்த போது13 முறை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு சீன பயணிகள் சுமார் 4.5லட்சம் பேர் பயணித்திருக்கிறார்கள்.அதனால் தான்  தற்போது, அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்பட்டிருக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் நவ் நாளிதழ் ஆய்வு கட்டுரையை வெளியிட்டிருந்தது.

Chinese government announces return to normalcy
Author
China, First Published Apr 9, 2020, 10:47 AM IST

T.Balamurukan

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உச்சகட்டத்தில் இருந்த போது13 முறை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு சீன பயணிகள் சுமார் 4.5லட்சம் பேர் பயணித்திருக்கிறார்கள்.அதனால் தான்  தற்போது, அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்பட்டிருக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் நவ் நாளிதழ் ஆய்வு கட்டுரையை வெளியிட்டிருந்தது.சீனா, கொரோனா வைரஸ் நோயை உலக நாடுகள் முழுவதும் கொண்டு சென்ற பெருமைக்கு சொந்தக்காரராக இடம்பித்து,ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தை குழிதோண்டி புதைக்கும் அளவிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chinese government announces return to normalcy

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 88 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனாவால் எந்த மரணமும் நிகழவில்லை என நேற்று சீன அரசு தகவல் வெளியிட்டது.இந்நிலையில், கொரோனா வைரஸ்  உருவெடுத்த சீனாவின் வுகான் நகரம் சுமார் 11 வாரங்களுக்கு பின் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்படுவது இல்லாத நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், சீன நகரமான வுகானில், கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியூர்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.அந்நாட்டு மக்கள் இப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

Chinese government announces return to normalcy

பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து திறக்கப்பட்டுள்ளன. வுகானிலிருந்து பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் மற்ற பகுதிகளுக்கு 200 விமானங்கள் புறப்படத் தயார் நிலையில் உள்ளது. இவற்றின் மூலம் 10,000 பேர் வரை நகரை விட்டு வெளியேறலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 100 அதிவேக ரயில்கள் வுகானிலிருந்து மற்ற நகரங்களுக்குச் செல்ல தயார் நிலையில் உள்ளன. விமானம் மற்றும் ரயில்கள் மூலம் 65 ஆயிரம் பேர் வுகானை விட்டு வெளியேறியுள்ளர். இதேபோல் சாலைப் போக்குவரத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தளர்வை வரவேற்கும் விதமாக இரவே கட்டடங்களில் வண்ண விளக்குகளைப் ஒளிரவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வுகான் மக்கள் வெளிப்படுத்தி சந்தோசத்தில் இருக்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios