Asianet News TamilAsianet News Tamil

கேள்வி,பதிலுடன் வாதம் செய்யத் தயாரா? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் சவால் ....

குடியுரிமைத்திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தன்னை விமர்சிப்பவர்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி மூலம் விவாதம் செய்யத் தயாரா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சவால் விடுத்துள்ளார்


 

chidambaram challenge to modi
Author
Chennai, First Published Jan 14, 2020, 7:32 AM IST

கொல்கத்தாவில்  நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ குடியுரிமைத் திருத்தச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது, மாறாக குடியுரிமை இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும். 

இதைசிலர் தவறாகப் புரி்ந்து கொண்டு, மக்களிடம் தவறான கருத்துக்களைப் பரப்புகிறார்கள்” எனத் தெரிவித்தார் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் இன்று பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “ குடியுரிமைத் திருத்தச்சட்டம் என்றால் குடியுரிமை வழங்கும் சட்டம், பறிக்கும் சட்டம் அல்ல. 

chidambaram challenge to modi

பலரும் சிஏஏ என்பது என்ஆர்சி, என்பிஆருடன் தொடர்புள்ளது, பலரை குடியுரிமை அல்லாதவர்களாக அறிவித்து குடியுரிமையை பறித்துவிடும் என பலர் நம்புகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்

chidambaram challenge to modi
இந்த விஷயத்தில் பிரதமர் மோடிக்கு நான் கூறும் ஆலோசனை இந்த விஷயத்தை பொதுவெளியில் விவாதம் செய்ய வேண்டும். பிரதமர் மோடி தனது விமர்சகர்களுடன் பேசவில்லை. விமர்சகர்களுக்கு பதில் அளித்து பேசும் வாய்ப்பை பிரதமர் மோடி வழங்கவில்லை. 

இதற்கு ஒரேவழி, பிரதமர் மோடி தனது சிறந்த 5 விமர்சகர்களைத் தேர்வு செய்து, தொலைக்காட்சியில் நேரலை விவாதத்தில், சிஏஏ சட்டம் குறித்து கேள்வி, பதில் விவாதம் நடத்துவதுதான். 

chidambaram challenge to modi

அதை மக்கள் பார்க்கட்டும், கேட்கட்டும், அவர்கள் அதன்பின் குடியுரிமைத் திருத்தச்சட்டம் குறித்து முடிவுக்கு வரட்டும். பிரதமர் மோடி என்னுடைய ஆலோசனைக்கு நிச்சயம் சாதகமான முடிவை அறிவிப்பார் என நம்புகிறேன். பிரதமர் மோடி உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு பேசுவதால் தனக்கு எதிராக கிளம்பும் என்த கேள்விக்கும் அவர் பதில் அளி்த்ததில்லை. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios