Asianet News TamilAsianet News Tamil

அவர்களும் மனிதர்கள் தானே கொஞ்சம் அக்கறை காட்டுங்க... போலீஸ் மரணத்தால் கலங்கும் மு.க.ஸ்டாலின்..!

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஓய்வின்றி காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பணியில் ஈடுபட்டிருந்த இளம் வயது போக்குவரத்து காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

chennai traffic police dead...mk stalin condolences
Author
Chennai, First Published Apr 9, 2020, 10:46 AM IST

காவலர்களுக்கு பணிச்சுமை, மன அழுத்தம் ஏற்படாதவாறு டிஜிபியும், அரசும் அக்கறை காட்ட வேண்டும் என திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து காவலராக இருந்தவர் அருண் காந்தி (33). இவர் வழக்கம் போல் நேற்று பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.  உடனே அருகில் இருந்த காவலர்கள் போலீஸ் வாகனம் மூலம் அரசு ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக கூறியுள்ளனர். 

chennai traffic police dead...mk stalin condolences

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஓய்வின்றி காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பணியில் ஈடுபட்டிருந்த இளம் வயது போக்குவரத்து காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து காவலர் அருண்காந்தியின் மரணத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின்  அவரது டுவிட்டர் பக்கத்தில்;- பாதுகாப்புப் பணியில் மாரடைப்பால் மறைந்த, மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் அருண்காந்தியின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். நெருக்கடியான இக்காலத்தில் காவலர்களுக்கு பணிச்சுமை, மனஅழுத்தம் ஏற்படாதவாறு டிஜிபியும், அரசும் அக்கறை காட்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios