"குற்றவாளிகள் குடும்பத்துக்கு பார்ப்பன அக்கிரகாரத்தில் ஒரு மாளிகை" கமலுடன் கைகோர்த்த சாருஹாசன்...
"குற்றவாளிகள் குடும்பத்துக்கு பார்ப்பன அக்கிரகாரத்தில் ஒரு மாளிகை கட்டி கொடுத்து விட்டார்கள்" என்று கமல் ஹாசனின் அண்ணன் சாருஹாசன் தனது முகநூல் பக்கத்தில் கமலுக்கு ஆதரவாகவும் ஆளும் அரசுக்கு எதிராகவும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்களாக ஆளும் அரசுக்கு எதிராக தனது கண்டனத்தை காட்டமாகவும் நேரடியாகவும் பதிவிட்டுவருகிறார் கமல் ஹாசன். அவருக்கு ஆதரவாக நடிகர் நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்கள் குரல்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக அவரது அன்னான் சாருஹாசன் தனது முகநூல் பக்கத்தில் ஆளும் அரசுக்கு எதிரான தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எங்கள் செலவில் குற்றவாளிகள் குடும்பத்துக்கு பார்ப்பன அக்கிரகாரத்தில் ஒரு மாளிகை கட்டி கொடுத்து விட்டார்கள் என்று 60 சதவிகிதம் சசிகலா அவர்கள் கட்சியை எதிர்த்தவர் நினைப்பது எங்கள் அறியாமையோ..?…
இன்று ஆட்சியில் இருப்பவர்கள் வெளிப்படையாகவே சிறையில் இருக்கும் சின்னம்மாள் சொல்படி ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் சிந்தனையை உச்சநிதிமன்ற தீர்ப்பு மாற்றியிருக்கிறது. என்று நினைக்கிறேன்…
மேலும், “கமல் ஹாசன் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு நல்லது. ஆனால், அவரால் யாரையும் திருத்த முடியாது. பெரியாரின் நேர்மையைக் கூட ஒப்புக் கொள்ளாதவர்கள் தமிழ் மக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.