தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளில் காலியாக இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஆகையால், 2 தொகுதிகளுக்கும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ. சாமி உடல்நிலை குறைவால் கடந்த வாரம் உயிரிழந்தார். இந்நிலையில், குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். திமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்த மறைவால் தமிழக சட்டப்பேரவையில் 2 இடங்கள் காலியாகி உள்ளன. இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவை செயலாளர் 2 தொகுதிகள் காலியாக இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையர் பரிந்துரை செய்தார். 

இதையும் படிங்க;-  திருட்டு தனமாக இயங்கி வந்த திமுக துரைமுருகனின் குடிநீர் ஆலைக்கு சீல்... அதிகாரிகள் அதிரடி..!

இதனையடுத்து, தமிழக தேர்தல் ஆணையர் சத்ய விரத சாஹூ அவர்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில், திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகள் மார்ச் 1-ம் தேதி அடிப்படையில் காலியாக உள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். மார்ச் 1-ம் தேதியில் இருந்து அடுத்து வரும் 6 மாதத்திற்குள் 2 தொகுதிகளில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பது விதியாகும். 

இதையும் படிங்க;- வாயை பொத்தி கதற கதற கூட்டு பாலியல் பலாத்காரம்... வெறி தீராததால் மரத்தில் தொங்கவிட்ட 10-ம் வகுப்பு மாணவர்கள்.!

ஆனால், 2021-ம் ஆண்டு மே 25-ல் அரசின் பதவிக்காலம் முடிவதால் 6 மாதத்திற்குள் தேர்தல் நடைபெறுமா என்ற ஐயம் நிலவி வந்த நிலையில் அவற்றிற்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்நிலையில், தான் 2 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் 2 தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.