Asianet News TamilAsianet News Tamil

குடிமகன்களுக்காக மத்திய அரசிடம் மல்லுக்கட்டும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூர்..!!

அரசாங்கம் மாலை நேரத்தில் கொஞ்சம் நேரம் மதுபான கடைகளை திறந்து வைத்தால் நல்லது.அரசுக்கும் வருமானம் கிடைத்தது மாதிரி இருக்கும்,மக்களுக்கும் ரிலாக்ஸ் கிடைத்தது மாதிரி இருக்கும்னு ஐடியா கொடுத்து அசத்தியிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஒருவர்.
 
Bollywood actor Rishikapur to fight federal government
Author
India, First Published Apr 1, 2020, 8:10 PM IST

T.Balamurukan

அரசாங்கம் மாலை நேரத்தில் கொஞ்சம் நேரம் மதுபான கடைகளை திறந்து வைத்தால் நல்லது.அரசுக்கும் வருமானம் கிடைத்தது மாதிரி இருக்கும்,மக்களுக்கும் ரிலாக்ஸ் கிடைத்தது மாதிரி இருக்கும்னு ஐடியா கொடுத்து அசத்தியிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஒருவர்.

Bollywood actor Rishikapur to fight federal government

கொரோனா வைரஸ் தற்போது 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான வைரஸில் தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இதுவரை உலகம் முழுவதும் 8 லட்சத்து 57ஆயிரத்து 487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை1,618 ஆகவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 52ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால், நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்கள், தியேட்டர்கள், மால்கள், மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், அரசாங்கம் மாலை நேரத்தில் கொஞ்சம் நேரம் மதுபான கடைகளை திறந்து வைத்தால் நல்லது. என்னை தவறாக நினைக்காதீர்கள். வீட்டில் உள்ள மனிதன் மனசோர்வால் உள்ளார்கள். போலீசார், மருத்துவர்கள், பொதுமக்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. அதேசமயம் மாநில அரசுகக்கும், கலால் துறைக்கும் வருவாய் தேவைப்படுகிறது. மனசோர்வில் விரக்தி ஏற்பட்டு விட கூடாது என்று நினைக்கிறேன்" என்று ஐடியா கொடுத்துள்ளார்.

Bollywood actor Rishikapur to fight federal government
முன்னதாக கேரளாவில் மதுகிடைக்காமல் குடிநோயாளிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்றுள்ளனர். இதனால் அங்கு மருத்துவர்கள் பரிந்துரையுடன் மது கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios