காலணி வீசிய பாஜக பெண் தொண்டர்... கொலை வெறித்தாக்குதல் நடத்திய மதிமுக... பரபரப்பு வீடியோ!!
திருப்பூரில் பாஜகவை சேர்ந்த சசிகலா மீது மதிமுகவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் பாஜகவை சேர்ந்த சசிகலா மீது மதிமுகவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று திருப்பூர் வருகை தந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் குமரன் சிலைக்கு முன்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக பெண் தொண்டர் ஒருவர் காலணி வீசியதால், மதிமுகவினர் அவரைத் கடுமையாக தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.