Asianet News TamilAsianet News Tamil

கவர்ச்சியைக் காட்டி காரியத்தை முடிக்க ஸ்கெட்ச் போடும் பாஜக...!! அமளியில் இறங்கி அதகளம் செய்ய காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்...!!

பொருளாதாரச் சரிவு சிஐஏ போராட்ட பரபரப்புகளுக்கு மத்தியில் இந்திய பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்கியது . 

bjp plan to attractive announcement for Delhi assembly election - but opposition party plan to uproar
Author
Chennai, First Published Jan 31, 2020, 7:33 PM IST

பொருளாதாரச் சரிவு சிஐஏ போராட்ட பரபரப்புகளுக்கு மத்தியில் இந்திய பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்கியது .  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை முழுமையான பொது பட்ஜட்டை தாக்கல் செய்கிறார் .  முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை இன்று வெளியிடப்பட்டது ,  பொருளாதார மந்த நிலை ,  இந்திய குடியுரிமை திருத்த சட்டம் ,  தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற விவகாரங்களில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நாளைய பட்ஜெட் தொடர் அனல் பறக்கும் என தெரிகிறது .  ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம்  கடைசியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்ந நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை பாஜக அறிமுகப்படுத்தியது .

bjp plan to attractive announcement for Delhi assembly election - but opposition party plan to uproar

பாஜக ஆட்சியில்  ரயில்வே பட்ஜெட்டுடன் சேர்த்து பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது ,   சுமார் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார மந்தநிலை ,  வேலைவாய்ப்பு விகிதம் சரிவு ,  உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ,  விலைவாசி உயர்வு  என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.   எனவே பொருளாதார மந்த நிலையை மேம்படுத்தும் அறிவிப்புகள் ,  வருமான வரி சலுகைகள் ,  ஜிஎஸ்டி வரி குறைப்பு , வீட்டுவசதி திட்டங்களுக்கான வரிச்சலுகைகள் ,  பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகள்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .  அதேபோல்  வரும்  8ஆம் தேதி டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் அதையும் குறிவைத்து  பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான சலுகைகள் இடம்பெற வாய்ப்புள்ளது

bjp plan to attractive announcement for Delhi assembly election - but opposition party plan to uproar

ஒருபுறம் பொருளாதார வீழ்ச்சி மத்திய அரசுக்கு சவாலாக உள்ளநிலையில்  மறுபுறம் குடியுரிமை திருத்த சட்டம் ,  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ,  இந்திய குடியுரிமை சட்டம்  , தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு முடிவுகளை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன ,  எனவே இந்த விவகாரங்களை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன . பட்ஜெட்டின் போது  இடையூறு செய்யாமல் இருக்கவும்,   கூட்டத்தொடர் முடியும் வரை அரசுக்கு  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்  மத்திய அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .  இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா , அவையை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.   ஆனாலும் எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து அரசுக்கெதிராக ஓங்கி குரலெழுப்ப திட்டமிட்டுள்ளனர் .  எனவே நாளை நடைபெற உள்ள  பட்ஜெட்டில் அமளிக்கும் காரசார விவாதத்திற்கும் பஞ்சம் இருக்காது என தெரிகிறது. 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios