Asianet News TamilAsianet News Tamil

இக்கட்டான நேரத்தில் பொறுமையா இருக்கோம்... ஹெச். ராஜா திடீர் காட்டம்!

டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்ற பலருக்குக் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது தகவல்கள் வெளியாகிவருகின்றன. அங்கிருந்து வந்தவர்கள் மூலம் தமிழகம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவியிருக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

BJP National Secretary H, Raja warns in delhi conference issue
Author
Chennai, First Published Mar 31, 2020, 8:38 PM IST

இந்தக் கடினமான காலகட்டத்தில் எந்தவித சர்ச்சையும் வேண்டாம் என்று நாம் பொறுமை காத்தால், இந்துக்களை திட்டமிட்டு இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

BJP National Secretary H, Raja warns in delhi conference issue
டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்ற பலருக்குக் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது தகவல்கள் வெளியாகிவருகின்றன. அங்கிருந்து வந்தவர்கள் மூலம் தமிழகம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவியிருக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.BJP National Secretary H, Raja warns in delhi conference issue
இந்நிலையில் டெல்லி மாநாடு தொடர்பான செய்தியில் படத்தை மாற்றிப் போட்டு காட்டியிருப்பதாக பாஜக  தேசிய செயலாளர் ஹெச். ராஜா கொந்தளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மார்ச் 8, 9, 10 தேதிகளில் டில்லி நிஜாமுதினில் நடைபெற்ற தப்லிக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இச்செய்தியை வெளியிட்ட டிவி, அமைப்பின் பெயரைப் போடாமல் திருமண் அணிந்த இந்துவின் படத்தை வெளியிட்டுள்ள செயல் திட்டமிட்ட சதி.” என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

 BJP National Secretary H, Raja warns in delhi conference issue
இன்னொரு ட்விட்டர் பதிவில், “இந்த கடினமான காலகட்டத்தில் எந்தவித சர்ச்சையும் வேண்டாம் என்று நாம் பொறுமை காத்தால் ஒரு தொலைக்காட்சி இந்துக்களை திட்டமிட்டு இழிவு படுத்துவது அனுமதிக்க முடியாது. இச்செயலுக்கு டிவி நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை தேவை” என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios