கோவா, புதுச்சேரியைப் போன்ற யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக இருக்கும் டாமன் டையு பகுதியின் பாஜக தலைவர் கோபால் டன்டல். 48 வயதான அவர் அப்பகுதியில் பிரபலமான பாஜக தலைவராக விளங்கினார்.

இவர்  சில நாட்களுக்கு முன்பு ஹோட்டல் அறை ஒன்றில் ஒரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். அப்போது யாரோ சிலர் மறைதிருந்து அவரது லீலைகளை வீடியோ எடுத்துள்ளனர். 

இதையடுத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் பரவி விட்டுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அவர் பெண்ணுடன் நிர்வாணக் கோலத்தில் இருக்கும் வீடியோக்கள்  சரசரவென பரவி டிரெண்டிங்க ஆனது.

இதையடுத்து கோபால் டன்டலை அழைத்த பாஜக தலைவர் அமித்ஷா, உடனடியாக பதவியை ராஜினாமாஎசய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், தனது பதவியை கோபால் டன்டல் ராஜினாமா செய்ததாகவும் அவரது ராஜினாமாவை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஏற்றுக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.