Asianet News TamilAsianet News Tamil

கொஞ்சம் இப்ப பாருங்க சாத்தான் வேதம் ஓதுது... ப.சிதம்பரத்தை வெளுத்து வாங்கிய எச்.ராஜா..!

விஜய் மல்லையா, நிரவ் மோடி, சோக்சி, இவர்கள் கடன் பெற்றது காங்கிரஸ் ஆட்சியில். மோடி அரசின் கடுமையான நடவடிக்கைகளால் இந்தியா திரும்ப முடியவில்லை. மேலும், அனில் அம்பானி படும் பாடு உலகறியும். கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு 3 லட்சம் கோடிக்கு மேல் வாராக் கடனை வசூலித்துள்ளது என்றும், அவங்க குடும்பத்தோடு திகார் சிறைக்குப் போவார்கள். 

bjp leader h.raja indirectly controversy speech
Author
Chennai, First Published Mar 29, 2020, 10:40 AM IST

அவங்க குடும்பத்தோடு திகார் சிறைக்குப் போவார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். 

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 30,000 கடந்துள்ளது. உலகளவில் கொரோனாவால்  6.65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1,33,057 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில்1029ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 அதிகரித்துள்ளது. இந்த நோய் பாதிப்பில் இருந்து 85 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க மத்தியமற்றும் மாநிலஅரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறன்றனர். மேலும், மத்திய அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக ப.சிதம்பரம் மத்திய அரசை பாராட்டியிருந்தார். 

bjp leader h.raja indirectly controversy speech

இந்நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா அவரது டுவிட்டர் பக்கத்தில்;- " பெயர் சொல்ல விரும்பவில்லை. நான் இன்று வரை விமானத்தில் J கிளாசில் போனதில்லை. ஆனால், தங்களை காம்ரேட் என்றும் தொழிலாளிகள் துணைவன் என்றும் கூறிக்கொண்டு J கிளாசில் நான் சென்ற அதே விமானத்தில் பயணித்த நபர்கள் இன்று தொலைக்காட்சியில் பாடம் எடுக்கின்றனர். 

 

 

மேலும், விஜய் மல்லையா, நிரவ் மோடி, சோக்சி, இவர்கள் கடன் பெற்றது காங்கிரஸ் ஆட்சியில். மோடி அரசின் கடுமையான நடவடிக்கைகளால் இந்தியா திரும்ப முடியவில்லை. மேலும், அனில் அம்பானி படும் பாடு உலகறியும். கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு 3 லட்சம் கோடிக்கு மேல் வாராக் கடனை வசூலித்துள்ளது என்றும், அவங்க குடும்பத்தோடு திகார் சிறைக்குப் போவார்கள். கொரோனா அவர்களுக்கு இடைக்கால நிவாரணம் அவ்வளவே என்றும், கொஞ்சம் இப்ப பாருங்க சாத்தான் வேதம் ஓதுது என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த மறைமுகமான பேச்சு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்த சாடுவதாகவே தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios