இந்தத் தேர்தலில் மக்கள் மீண்டும் தவறிழைத்திருப்பதாகவும், மக்கள் அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டு அலையப் போவதாக சொன்னதால் பிஜேபி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால் பிஜேபி தொண்டர்கள் காவி வெட்டி பார்சல் அனுப்புகின்றனர்.

தமிழக பிஜேபி தலைவர்களான தமிழிசை, ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை, விஜய் நடித்த மெர்சல் படம் ரிலீஸ் சமயத்தில் தாறுமாறாக விமர்சித்திருந்தனர். இதில் பிஜேபி தேசிய செயலாளர் ஹெச் ராஜாவோ ஒரு படி மேலே, போய் விஜய்யை ஜோசப் விஜய் என அவரது வோட்டர் ஐடி கார்டு எடுத்து ட்விட்டரில் போட்ட சம்பவமே அரங்கேறியது. அதுமட்டுமல்ல மெர்சல் படத்தை நெட்டில் பார்த்ததாக பகிரங்கமாகவே சொன்னது தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பட விழாவில் பேசிய விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், இந்தத் தேர்தலில் மக்கள் மீண்டும் தவறிழைத்திருப்பதாகவும், மக்கள் அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டு அலையப் போவதாக பிஜேபியை கடுமையாக விமர்சித்து தள்ளினார்.

விஜய் தந்தை பேசிய சில நாட்களிலேயே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் போதுமான நிலையில், பிஜேபி கூட்டணி 353 தொகுதிகளை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி கூட்டணி 90 தொகுதிகளை மட்டுமே பெற்று பெரும் சரிவை சந்தித்தது.

இந்நிலையில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவரும் காவி வெட்டி கட்டிக்க கொண்டு அலைவதாக சொன்னதால் பிஜேபி பெரும்பான்மையது ஜெயித்ததால் விஜய்யின் தந்தைக்கு காவி வேட்டி பார்சலில் அனுப்புகின்றனர் பிஜேபி தொண்டர்கள். இதுகுறித்து ஒரு பிஜேபி தொண்டர்கள் வெளியிட்டுள்ள பதிவில், செம்ம திருப்பூர் பாஜக இளைஞர் அணி, மோடி பிரதமரானால் காவி வேட்டி கட்டிக்கொண்டுதான் அலைய வேண்டும் என்று கூறிய நடிகர் ஜோசப் விஜயின் தந்தை S.A.சந்திரசேகர்க்கு பதிலடி தரும் விதமாக இன்று பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக தாராபுரம் தலைமை அஞ்சலகத்தில் முதல் தவணையாக காவி வேட்டி அனுப்பட்டது... இது தொடரும்... இனி S.A.சந்திரசேகர் அவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் காவி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.