தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர் மறைந்த செல்வி ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக தனது இறுதிக்காலம் வரை இருந்தவர். கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி முதல்வரானார். அதன்பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் மரணமடைந்தார்.

அவரது 72வது பிறந்தநாள் விழா கடந்த 24 ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது படங்களுக்கும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில் மறைந்த செல்வி ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆள்வார் என்னும் பழமொழியை உண்மையாக்கியவர். 

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப் பேற்றதுடன் மட்டுமின்றி தான், தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தி என்பதை, 6 முறை தமிழக முதல்வராக இருந்து சிறப்பாக ஆட்சி நடத்தி நிரூபித்தவர். மக்களால் நான்- மக்களுக்காகவே நான் என்று தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்காகவும் குரல் கொடுத்தவர். இவருக்கு மத்திய அரசு “பாரதரத்னா” விருது வழங்க வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

நள்ளிரவில் பயங்கரம்..! லாரி ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை..!