தி.மு.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. என ஒத்த கருத்துடைய கட்சிகளின் மேடைகளில் நின்று முழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேவேளையில் பி.ஜே.பி.யையும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் போட்டுப் பொளக்கிறார் மனிதர். 

அந்த வகையில் ‘சி.பி.எம். கட்சியை அரபிக் கடலில் கரைப்பேன்! என்று ஹெச்.ராஜா பேசியிருப்பது’ குறித்துக் அதிரடியாக கருத்து தெரிவித்திருப்பவர், “இந்த மாதிரி அரை லூசுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவரே ஒரு விஷயத்தை சொல்லுவார், பிறகு மறுப்பார். வீடியோவுல உள்ள வாய்ஸை மாற்றிட்டாங்கன்னு சொல்வார், அந்த ட்விட் என்னோட அட்மின் போட்டதுன்னு சொல்வார். 

இப்படியான அரை லூசு நபருக்கெல்லாம் பதில் சொல்லி எங்களுடைய நேரத்தை வீணடிக்க முடியாது, அவரையெல்லாம் கண்டுக்க கூடாது.” என்று பொரித்தெடுத்திருக்கிறார். 

அதே வேளையில் மதவாத பி.ஜே.பி.யையும், ஊழல் அ.தி.மு.க.வையும் தூக்கி எறிய வேண்டுமென்றால் தி.மு.க.வுடன் தான் தாங்கள் கூட்டணி சேர வேண்டும்!, தன் மீதான ஊழல் புகார்களில் இருந்து தி.மு.க. விடுபட்டுவிட்டது! என்றும் அவர் கூறியிருக்கிறார். 

பாலகிருஷ்ணனின் இந்த வார்த்தைகள், வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் இடம் பெறுவது உறுதியாகிவிட்டதை காட்டுகிறது! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இந்த சூழலில், ஹெச்.ராஜாவை கே.பாலகிருஷ்ணன் இப்படி ‘அரை லூசு’ என்று திட்டியிருப்பது, பி.ஜே.பி.க்குள் மட்டுமில்லாது, மார்க்சிஸ்டுக்குள்ளேயே ‘மாநில செயலாளரின் பக்குவமில்லாத பேச்சு’ எனும் விமர்சனத்தைக் கொண்டு வந்திருக்கிறது.