சொன்னா நம்புங்க.."நிர்மலாதேவி" எனக்கு யாரென்று தெரியாது "பார்த்தது கூட கிடையாது"....! பன்வாரிலால் பளீர்..!

கல்லூரி மாணவிகளை 'உயர் அதிகாரிகளின்' பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்த முயற்சி செய்த உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதத் துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவ நிர்மலா தேவி குறித்தும், தன் மீது  சுமத்தப்பட்ட குற்றசாடுகளுக்கும்  ஆளுநர்  பன்வாரிலால் புரோகித் செய்தியாளர் சந்திப்பில் பதில்  அளித்து வருகிறார்

அப்போது,

எனக்கு 78 வயதாகிறது. எனக்கு பேரன் பேத்திகள் உள்ளனர். கொள்ளு பேரப்பிள்ளைகள் கூட  உள்ளனர்

குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவியை நான் பார்த்தது கூட கிடையாது..

அவர்  பேசிய  உரையாடலில் கூட தாத்தா என்று தான் குறிப்பிட்டு உள்ளார்...

என் மீது  சுமத்தப்பட்ட எந்த  குற்றங்களும்  அடிப்படை ஆதாரம் அற்றவை எனவும்  தெரிவித்து உள்ளார்

விசாரணை அதிகாரியான ஆர். சந்தானத்திற்கு எந்த  தடையும் இல்லை...அவர் எங்கு வேண்டுமானாலும் சென்று விசாரணை நடத்தலாம்

மூத்த அதிகாரியே விசாரணை நடத்த வேண்டும் என நான் நினைக்கிறன்....

அவர்  ஒரு நேர்மையான அதிகாரி என்றும் தெரிவித்து  உள்ளார்

அதே வேளையில்..நிர்மலா தேவி விவகாரம் குறித்த விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை தற்போது தேவை இல்லை என்றும் தெரிவித்து உள்ளார்

ஆணையம் விசாரணை முடிந்த பின்,வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவு செய்யப்படும் என தெரிவித்து உள்ளார்.